கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மகாத்மா காந்திஜியையே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!

 
தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பா
யிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலைமுடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்குறிப்பட்டுள்ளார்.*

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக்கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?

(சிந்தனைச்சரம் நவம்பர் 1997. புத்தகம் )

>>>நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்

 
நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!

இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம்
,கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார்.
...
''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’

- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!


நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும்,உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று குறிப்பிடுகின்றார்

>>>"மாணவர்களை பள்ளியில் சேர்க்க வயது, மாற்று சான்றிதழ் வேண்டாம்'

கல்வி உரிமை சட்டத்தின்படி, வயது, பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே, மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். பள்ளி படிப்பை தொடர முடியாதவர்கள், பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள், இச்சட்டத்தால் பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சட்டப்படி, "13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடை நின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று தேவையில்லை. பெற்றோர் உறுதி மொழியை, வயது சான்றிதழாக ஏற்று, தேர்வுக்கு முதல் நாள் கூட சேர்க்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உடனடியாக அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச் சட்டத்தின்படி, பிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர், தங்கள் குழந்தைகளை, வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

>>>ஒன்றரை ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் தேர்வு : டி.ஆர்.பி., பெருமிதம்

"ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல், நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு:
தேர்வு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை
--------------------------------------------------
1. இடைநிலை ஆசிரியர் 9,689
2. சிறப்பு ஆசிரியர் 1,555
3. பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் 13,074
4. கம்ப்யூட்டர் ஆசிரியர் 192
5. சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் 136
6. முதுகலை ஆசிரியர் 3,438
7. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் 34
8. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 151
9. பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் 131
10. சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் 14
--------------------------------------------------------
மொத்தம் 28,414

>>>பொறியியல் மாணவர்களுக்கு கணினி வழி கற்றல் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

 
"கணினி வழி கற்றல் முறை (elearning), கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' (Bothi Access Solutions) நிறுவனம், பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து, பொறியியல் மாணவர்கள், தங்கள் பாடங்களை, கணினி வழி கற்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவ்வசதியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளில், நல்ல ஆசிரியர்கள், நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றாக்குறையால், பொறியியல் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பொறியியல் பாடங்களை, மாணவர்கள், கணினி வழி கற்றல் முறையில், எளிதாக பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."இ-லேர்னிங்' எனப்படும் இந்த கற்றல் முறை, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' நிறுவன தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏழு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான, 231 பாடங்களை, "இ-லேர்னிங்' முறையில் கொண்டு வந்துள்ளோம்.
"செமஸ்டர்' வாரியாக, மாணவர்கள், தங்களுக்கு தேவைப்படும் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இம்முறையில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை, www.bodhiaccess.com என்ற இணையதளத்தில் பெறலாம்.
இவ்வாறு ரமேஷ் கூறினார்.நிகழ்ச்சியில், மின்வாரிய விஜிலென்ஸ் ஐ.ஜி., சீமா அகர்வால், பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

>>>பிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, அரசின் கருத்தை கேட்டுள்ளனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதி துவங்கும் வகையில் அட்டவணை தயாரித்துள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும்.
தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால் செய்யப்பட்டு பொதுத் தேர்வு கால அட்டவணை முடிவு செய்யப்படும். பெரும்பாலும் மார்ச் 1ம் தேதி அடிப்படையில் உள்ள கால அட்டவணை இறுதி செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

>>>டிசம்பர் 13 [December 13]....

நிகழ்வுகள்

  • 1577 - சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
  • 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.
  • 1888 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 1937 - சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
  • 1949 - இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
  • 1959 - மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.
  • 1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
  • 1974 - மோல்ட்டா குடியரசானது.
  • 1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
  • 1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
  • 2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
  • 2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

இறப்புகள்

  • 1557 - டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
  • 1944 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)
  • 1987 - நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)
  • 2010 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
  • 2010 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்

சிறப்பு நாள்

  • மோல்ட்டா - குடியரசு நாள் (1974)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...