கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தொண்டை புண்ணுக்கு நிவாரணம் தரும் உணவுகள்..!!

 
குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளில் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவையே முதன்மையானவை. ஏனென்றால் அப்போது அதிக குளிர்ச்சி காரணமாக, உடலில் உள்ள வெப்பமானது வெளியேறும். எனவே இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலத்தில் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக குளிர்ச்சியான உணவுகள் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டு, இறுதியில் புண்ணை ஏற்படுத்திவிடும்.

ஆகவே தொண்டையில் கரகரப்பு ஏற்படும் போதே, ஒரு சில உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கரகரப்பு முற்றினால், பின்னர் தொண்டையில் புண் ஏற்பட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிட முடியாத அளவில் செய்துவிடும். சொல்லப்போனால் எச்சிலைக் கூட விழுங்க முடியாது. இந்த நிலையிலும் தொண்டையில் ஏற்படும் புண்ணை தடுக்க உணவுகள் தான் உதவுகின்றன. எனவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தொண்டையில் புண் வராமல் தடுப்பதோடு, வந்த புண்ணையும் சரிசெய்யலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சிக்கன் சூப்: இருமல் இருந்தால், மருத்துவர்களின் மருந்து என்னவென்றால், அது சூடான சூப் தான். ஏனெனில் அவை தொண்டையின் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும்.

மசாலா டீ: டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர் :அனைவரும் தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், தயிரை சாப்பிட்டால், அவை வயிற்றை தான் குளிரச் செய்யும். அதிலும் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை: சாறு மற்றும் தேன் சிட்ரஸ் பழங்களில் ஆன்டி-வைரல் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண்ணானது குணமாகிவிடும்.

சேஜ் இலை: மூலிகை செடிகளில் ஒன்றான சேஜ் என்னும் மூலிகை இலையில், உடலில் ஏற்படும் உள்காயம், புண் போன்றவற்றை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய இலைகளை சூப், சாலட் அல்லது ஏதேனும் பானங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளை சரிசெய்யலாம்.

வெதுவெதுப்பான ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் சளி ஏதேனும் பிடித்தருந்தால் அப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்ற தோன்றினால், வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸை கலந்து, அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஈஸியாக விழுங்க முடியும். அதுமட்டுமின்றி, அவை தொண்டைக்கு ஒரு படலம் போன்றதை ஏற்படுத்தி, புண்ணை எளிதில் குணமாக்கிவிடும்.

மிளகு: காரப் பொருட்களில் ஒன்றான மிளகை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும் போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: தொண்டைப் புண்ணை சரிசெய்யும் பொருட்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை சாலட் சாப்பிடும் போது அதன் மேல் ஊற்றியோ அல்லது அப்படியே ஒரு ஸ்பூனோ சாப்பிடலாம்.

>>>டிசம்பர் 20 [December 20]....

நிகழ்வுகள்

  • 69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.
  • 1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
  • 1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
  • 1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
  • 1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
  • 1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
  • 1915 - முதலாம் உலகப் போர்: கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.
  • 1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
  • 1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
  • 1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
  • 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
  • 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
  • 1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
  • 1984 - இங்கிலாந்தில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 1987 - பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
  • 1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
  • 1995 - அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது.

பிறப்புக்கள்

  • 1901 - ராபர்ட் வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
  • 1925 - மகதிர் பின் முகமது, மலேசியாவின் முன்னாள் பிரதமர்

இறப்புகள்

  • 1998 - அலன் லொயிட் ஹொட்ஜ்கின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)

>>>தமிழன் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) ஒரு அதிசிய விஞ்ஞானி !

 
தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தர
ம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ,மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக் காமிராக்களில் தூரங்களுக்கேற்ப சரி செய்து கொள்ளும் கருவி, பெட்ரோலால் இயக்கப்படும் இரு இருக்கை மோட்டார் கார், சில விவசாய புதுக்கண்டுபிடிப்புகள் என்று ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர். கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் பல மைல் கல்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு.

நாயுடு உருவாக்கிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு நாயுடு கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி "ஸ்பைசர்" வாங்கிக் கொண்டது.

ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் நாயுடு. அதற்கான புளு பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக நாயுடு கார் இருந்திருக்கும்.

குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார். அதன்படி 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்தநாள் 3.45 மணிக்கு கிரகப்பிரவேஷம் நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் ஷேவிங் மெஷின், மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் மாஸ்டர் கீ என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம் என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் நாயுடுவின் வாழ்நாள் சாதனை


பல வெற்றியாளர்கள் தங்கள் வெற்றியோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் அவர்களுடனேயே முடிந்து விடுகிறது. தாங்கள் கண்ட வெற்றியை பிற்கால சமூகமும் பெற வேண்டும் என்று எண்ணி அதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. ஜி.டி.நாயுடு அந்த வெகு சிலரில் ஒருவர்.

அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்: “இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர்.

இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். “நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை. இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்”

“நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்”

ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: “நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்”

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் “இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்” என்றார்.

இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!

>>>மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !

 
 தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

>>>கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள் !

 
கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்

>>>F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.
“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.
சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்க வாட்டில் இரு வெள்ளைக்கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண் டும்.
அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்ட த்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.
பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக்கூடாது. கார்பன்தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதி மன்றம் என விநியோகிக்க வேண் டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படி தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

>>>அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!

மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , 
ஆனந்த விகடன் இதழிலிருந்து....

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி

முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்

அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.

ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?

அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்

இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்

இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்

 அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்