கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>பள்ளி பாட புத்தகங்கள் "சிடி' முறையில் மாற்ற திட்டம்
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு
வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக,
பள்ளிகள்தோறும், 6 முதல், 8 வகுப்பு வரையிலான, பாடத்தினை "இ-கன்டன்ட்' என்ற
மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர்
பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு "லேப் டாப்' வழங்கப்பட்டுள்ளது. தகவல்
தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020' இலக்கை அடைய, அடுத்த
கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல்
கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம்,ஆசிரியர்கள் பாடம்
நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக
வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம்
தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர்
பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம்
வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ
முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன்
வழங்கவேண்டும்.
இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்' போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

>>>ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க அலுவலர்களுக்கு ஆட்சித் தமிழ் பயிற்சி
அரசின், சார்பு அலுவலகங்களில், ஆட்சி மொழித் திட்டத்தை முழுமையாக,
செயல்படுத்தும் வகையில், அலுவலர்கள், பணியாளர்களுக்கு, பயிற்சி கொடுக்க,
தமிழ் வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. அரசு அலுவலகங்களில், முழுமையாக,
தமிழ்வழியில் பதிவேடுகள் பராமரிப்பு, சுற்றறிக்கை உள்ளிட்டவை,
இருக்கவேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம்,70 சதவீதத்திற்கு மேல், ஆங்கில கலப்பு இன்றி, தமிழ் மொழி
பயன்படுத்தப்படுகிறது. இதை, 100 சதவீதமாக்க, தமிழ் வளர்ச்சித்துறை முயற்சி
மேற்கொண்டு வருகிறது.
அரசு சார்பு நிறுவனங்களான, மின்வாரியம், போக்குவரத்து கழகம், தன்னாட்சி அமைப்புகளான, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களிலும், முழுமையாக, ஆட்சிமொழித்திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில், பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மின்வாரியத்தில், 70 சதவீதத்திற்கு மேல், தொழில்நுட்ப வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, "வயர்மேன்' என்பதை, கம்பியாளர் என்றும், "பியூஸ்' என்பதை, "எரிஇலை' என்றும், "பீடர்' என்பதை, "மின்ஊட்டி' என்றும், பதிவேடுகளில் பயன்படுத்த, பயிற்சியில் அறிவுறுத்தப்படவுள்ளது. முழுமையாக, தமிழ்படுத்த முடியாத தொழில் நுட்ப வார்த்தைகளை ஆங்கில உச்சரிப்பில், தமிழில் எழுத கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை தொடர்ந்து, அலுவலக பராமரிப்பு நடைமுறை முழுமையும், தமிழ்படுத்தப்படவுள்ளது. இதை, நடைமுறைப்படுத்துகின்றனரா என, அந்தந்த மாவட்டத்திலுள்ள, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மூலம், அடிக்கடி ஆய்வு நடத்தப்பட வுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக முதற்கட்ட பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

>>>கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு
பள்ளி கல்வித் துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக
உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது.
இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என,
துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த மணி,
ஓய்வு பெற்றதும், ஆசிரியர் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், பள்ளிக்
கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய இடைநிலைக் கல்வி திட்ட கூடுதல்
இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக
கவனித்து வருகிறார். பொது நூலகத்துறை இயக்குனர் பணியிடமும், காலியாக
உள்ளது. இதை, தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கூடுதலாக கவனித்து
வருகிறார்.
நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த வரை, நூலகத் துறை இயக்குனராக நியமிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குனர் நியமிக் கப்படும் வரை, கூடுதல் பொறுப்பு நிலையே தொடரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர்
செந்தமிழ்ச் செல்வி, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால், அதிகாரிகள் மட்டத்தில், விரைவில் மாற்றங்கள் வரும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வுத்துறை இணை இயக்குனர் தங்கமாரி மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களின் பதவி உயர்வால், இரண்டு, இணை இயக்குனர் பணியிடங்கள் காலி ஏற்படும். நூலகத்துறையில், ஒரு இணை இயக்குனர் பணியிடம், ஏற்கனவே காலியாக உள்ளது. இந்தப் பதவியை, கண்ணப்பன், கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே, பணிமூப்பு பட்டியலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூன்று பேர், இணை இயக்குனர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இந்த மாற்றங்கள் அனைத்தும், புத்தாண்டு பிறந்ததும் நடவடிக்கைக்கு வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

>>>இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து,
முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது,
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர்,
ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி
இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப்
பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய
தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.
நெருக்கடி:
அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றோர், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம்.

அம்பலம்:
இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது.மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்தியபோதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்' செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்' வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.

சரிபார்ப்பு:
இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டுசென்றனர். புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
* உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
* சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர்.
* ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.
* "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்' பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர்.
இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால், அடுத்த, "ரேங்க்'கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி.,உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.
"கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட தயக்கம் ஏன்?டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்துகொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை.இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்.இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது' என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

>>>பள்ளி நீச்சல் குளத்தில், "டைவ்' வசதி கூடாது: புதிய விதிமுறையில் அரசு உத்தரவு
பள்ளி நீச்சல் குள பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில், சென்னை, கே.கே.நகரில் உள்ள, ஒரு தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், மாணவன் ஒருவன் மூழ்கி பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், பள்ளி நீச்சல் குளங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, நீச்சல் குளங்களை கட்ட வேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளை, 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.
* "டைவிங்' வசதி இருக்கக் கூடாது; அப்படி இருந்தால், உடனே, அத்தகைய வசதியை அப்புறப்படுத்த வேண்டும்.
* நீச்சல் குளத்தின் ஆழம், 5.5 அடிக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* நீச்சல் குளங்கள், நீளம், அகலத்தில், நான்கு விதமாக கட்டுவதற்கு, அனுமதி வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் அமைவிடம், தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட நீள, அகலத்தில், நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* அதிகபட்ச ஆழம், 5.5. அடியாக இருந்தாலும், அதிலும், முதலில் குறைவு, நடுத்தரம், அதிகம் என்ற, மூன்று நிலையில் இருக்க வேண்டும். மாணவர்களின் வயதிற்கு ஏற்ப, குறிப்பிட்ட பிரிவு ஆழத்திற்குள் அவர்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள், லைப்-ஜாக்கெட்டுகள், முதலுதவி வசதி போன்றவை, கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* மாநகராட்சி, தீயணைப்புத் துறையிடம் இருந்து, சான்றிதழ்களை பெற வேண்டியது, மிகவும் அவசியம். மற்ற பகுதிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்றிதழ் பெற வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் விரைவில் அரசு நர்சிங் கல்லூரி
சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் தலா ரூ.2.50 கோடியில் 120 மாணவிகள் பயிலும் வகையில், அரசு நர்சிங் கல்லூரியை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ், மத்திய அரசு, சிவகங்கை, தேனி, நாமக்கல் மாவட்டங்களில், புதிய அரசு நர்சிங் கல்லூரிகளை துவக்கவும், அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், நர்சிங் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல், தேனி அருகே வீரபாண்டி, சிவகங்கை, அருகே பூவந்தி ஆகிய இடங்களில், மத்திய அரசு நிதி உதவியுடன், 2013ம் ஆண்டுக்குள், அரசு நர்சிங் கல்லூரி துவக்கப்பட உள்ளது. பூவந்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 882 சதுர அடியில், ரூ.2.3 கோடியில் வகுப்பறை, நிர்வாக கட்டடம், மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது.
பொதுப்பணித்துறை பொறியாளர் (மருத்துவமனை கட்டடம்) ஒருவர் கூறுகையில், "தேசிய கிராம சுகாதார திட்டத்தில், நர்சிங் கல்லூரி கட்டுவதற்கு, திட்ட வரையரை தயாரித்து வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில், நாளை (டிச., 26) நடக்கும் சுகாதார திட்ட இயக்குனர் கூட்டத்தில், இதற்கு அறிவிப்பு வெளியாகும். அதன்பின், 2013க்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும்' என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2024-2025 Kalai Thiruvizha Banner
கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...