கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட்., சேர்க்கை தேதி ஜனவரி 19 வரை நீட்டிப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், இந்தப் படிப்பில் சேரலாம்.
அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் பணியும், தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். முகவரி: தமிழ்ப் பல்கலை கல்வி மையம், 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2, 36, மேல வடம் போக்கித் தெரு, மதுரை-625 001. மேலும் விவரங்களுக்கு 90433 43743 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை : அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்று, உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: இளைஞர்களை அறிவுடன், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களாக மாற்றுவதே உயர் கல்வியின் நோக்கம். உலக அளவில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் தற்போது உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 12 சதவீதம். இதை, 2025ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியியல், பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்குவது, மாணவர்களுக்கான இலவச "லேப்டாப்'கள் வழங்குவது, கல்வி நிறுவனங்கள்- தொழிற்சாலைகள் இணைப்பை வலுப்படுத்துவது, அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. உயர் கல்வியை சர்வதேச தரம் வாய்ந்ததாகவும், அறிவாற்றல் மிகுந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கவும் வகையிலும் இந்த அரசு செயல்படுகிறது. பட்டங்கள் பெறுவதை, சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்கான அத்தாட்சி சீட்டாக நினைத்து, எதிர்கால பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மாணவர்களின் செயல்பாடு அமையவேண்டும், என்றார்.

மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் பேசுகையில், "தலைமைப்பண்பு, முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் தேவை. பொது வாழ்வில் பெண்களை தகுதியுள்ளவர்களாக மாற்றும் வகையில், பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பல்கலைகள் வடிவமைக்க வேண்டும்,'' என்றார்.

துணைவேந்தர் மணிமேகலை பேசுகையில், "1984ல் துவங்கப்பட்ட இப்பல்கலை, மகளிர் கல்வி மேம்பாட்டில் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்தாண்டு 230 பி.எச்டி., பட்டங்கள், முதுகலையில் 3126, இளங்கலையில் 6459 என மொத்தம் 11,715 பேர் பட்டங்கள் பெற்றுள்ளனர்,'' என்றார். உயர் கல்வி செயலாளர் அபூர்வ வர்மா, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பங்கேற்றனர்.

>>>"பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

"பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட்ட, பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வுக்கு, மாணவ, மாணவியரை தயார் செய்ய, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில், இரவு, 8:00 மணி வரை கூட, சிறப்பு வகுப்புகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

>>>ஜனவரி 11 [January 11]....

நிகழ்வுகள்

  • 1055 - தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.
  • 1569 - முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
  • 1693 - சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
  • 1779 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
  • 1782 - பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
  • 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1805 - மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.
  • 1851 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
  • 1879 - ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
  • 1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
  • 1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
  • 1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
  • 1943 - ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
  • 1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
  • 1957 - ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
  • 1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
  • 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1924 - ரொஜர் கிலெமின், நோபல் பரிசு பெற்றவர்
  • 1973 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

  • 1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
  • 1966 - லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
  • 1968 - ஐசடோர் ஐசாக் ராபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1898)
  • 1983 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
  • 1991 - கார்ல் ஆன்டர்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
  • 2008 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)

சிறப்பு நாள்

  • அல்பேனியா - குடியரசு நாள் (1946)
  • நேபாளம் - ஐக்கிய நாள்

>>>ஹாப்பி பர்த்டே டின்டின்...!

 
டின்டின் எனும் சாகாவரம் பெற்ற கதாபாத்திரம் முதன்முதலில் தோன்றிய தினம் இன்று (ஜனவரி 10).

ஹெர்ஜ் என்கிற மனிதர் 1929-ல் உருவாக்கி 55 வருடங்கள் வரைந்து தள்ளிய கதைகள்தான் இன்றைக்கு எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன. ஒரு 17 வயது பத்திரிக்கை நிருபன், அழகான - புத்திசாலியான நாய், ஏகத்துக்கும் தங்கள் குழந்தைத்தனமான செயல்களால் அதிரடிக்கும் இரட்டையரான போலீஸ் அதிகாரிகள்... இவற்றோடு குற்றங்கள், உலகம் முழுக்க பயணம், துப்பறிதல் என்று எல்லாமும் சேர்ந்துகொண்டால் விறுவிறுப்புக்கா பஞ்சம்?

டின்டின் கதாப்பாத்திரம் முதலில் பெல்ஜிய நாட்டு பிரஜையாகதான் உருவானான். காலப்போக்கில் ஒட்டுமொத்த ஐரோப்பியாவுக்கும் உரியவனாக மாறிப்போனான். ஸ்னோயி எனும் அந்த நாய்க்குட்டியின் முதல் பெயர் மிலோ. டின்டினின் குடும்பத்தை பற்றி குறிப்புகள் எங்கேயும் வந்ததே இல்லை.

மொத்தம் இருபத்தி மூன்று காமிக் தொடர்களும், கூடவே முடிக்காமல் விட்டுப்போன டின்டின் மற்றும் ஆல்பா கலை எனும் தொடரையும் சேர்த்து 20 கோடி பிரதிகள் உலகம் முழுக்க விற்று தீர்ந்திருக்கின்றன.

எப்படி டின்டின் உருவானார் என்பதற்கு பல சுவையான மனிதர்களை சொல்கிறார்கள். அதில் பாலே ஹுல்ட் எனும் பதினைந்து வயது சிறுவன் 44 நாட்களில் உலகம் சுற்றி வந்ததும் ஒரு தாக்கம் என குறிக்கிறார்கள். லேட்டஸ்டாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ப்ளூரே தொழில்நுட்பத்தில் டின்டின்னை 3Dயில் காண்பித்தபொழுது ரசிகர்கள் மீண்டும் அவனோடு துப்பறிய போய்விட்டார்கள்.

ஹாப்பி பர்த்டே டின்டின்!

>>>'காமன்சென்ஸ்' ...!..?

அமெரிக்காவை கொலம்பஸ் முதன்முதலில் கண்டுபிடித்த பின் பல்வேறு ஐரோப்பிய நாட்டின் மக்கள் அங்கே குடியேறினார்கள். அவர்களுக்குள் சண்டையிட்டும், அந்நாட்டின் பூர்வகுடிகளான சிவப்பிந்தியர்களை கொன்றும் மோதிக்கொண்டார்கள். இறுதியில் இங்கிலாந்து வென்று ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் நாட்டிலிருந்து குடியேறி இங்கு வந்து இங்கிலாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டே மக்கள் வாழ்ந்து வந்தார்கள். பின் பல சச்சரவுகள் இரண்டு பகுதிகளையும் சண்டைக்குள் இறக்கின. வரிவிதிப்புக்கு எதிராக கடலில் டீ தூளை கொட்டுவதெல்லாம் நடந்தது. ஆனால், பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அப்பொழுதுதான் தாமஸ் பெய்ன் எழுதிய 'காமன்சென்ஸ்' நூல் வெளியானது.

நாற்பத்தி எட்டு பக்கங்களே ஆன நூலில், "கண்டம் நாட்டை ஆளலாம், கண்டத்தை ஒரு நாடு ஆளலாமா?" என்கிற கேள்வியை எழுப்பியது. அந்த நூலின் கீழே நக்கலாக ஒரு ஆங்கிலேயனால் எழுதப்பட்டது என குறிப்பிட்டார் பெய்ன். அந்த நூல் அதிகாரப்பூர்வமாக ஒரு லட்சத்திற்கு மேலும், கள்ளசந்தையில் அதுபோல நான்கு முதல் ஐந்து மடங்கும் விற்றும் விடுதலை வேள்விக்கு எண்ணெய் வார்த்தது. அமெரிக்கா மிகப்பெரிய ஆங்கிலேய அரசை வீழ்த்தி தனி நாடானது!

>>>ஜனவரி 10 [January 10]....

நிகழ்வுகள்

  • 1475 - மல்தாவியாவின் மூன்றாம் ஸ்டீபன் ஒட்டோமான் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தான்.
  • 1645 - லண்டனில் முதலாம் சார்ல்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர் வில்லியம் லாவுட் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
  • 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
  • 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
  • 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
  • 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
  • 1881 - யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1924 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
  • 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
  • 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
  • 1984 - 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
  • 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
  • 1995 - உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
  • 2001 - விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்படட்து. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
  • 2005 - தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.

பிறப்புகள்

  • 1869 - கிரிகோரி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு (இ. 1916)
  • 1883 - டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
  • 1916 - சூன் பேர்க்ஸ்ட்ரொம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2004)
  • 1936 - ராபர்ட் வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
  • 1940 - கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்

இறப்புகள்

  • 1761 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
  • 1778 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)
  • 1904 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரெஞ்சு ஓவியர், சிற்பர் (பி. 1824)
  • 1951 - சின்கிளயர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
  • 1986 - யாரொஸ்லாவ் செய்ஃபேர்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1901)
  • 1997 - அலெக்சாண்டர் ரொட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...