கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெசிமர்...

 
பெசிமர்... தொழில்மயம் ஒட்டுமொத்த ஐரோப்பாவை புரட்டிப்போட்டபொழுது இங்கிலாந்தில் இணையற்ற வேலைகளை இவர் செய்தார். நுரம்பெர்க் எனும் இடத்தில் வெண்கலம் பொடியாக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் முறைகள் நேரம் எடுத்துக்கொண்டன. அந்த பொடியை பெற்று அதை மேலும் தரமேம்படுத்தி, அதை எளிமையாக தயாரிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதை மாற்று பொறியியல் என கொண்டாடினார்கள்.

இவர் வருவதற்கு முன்வரை வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு எனும் இரண்டு வகைகளையே பாலங்கள், தண்டவாளங்கள் முதலியவற்றில் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். இவை வலிமை குறைந்ததாக இருந்ததால் அடிக்கடி விரிசல் விட்டு செயலிழந்து விபத்துக்களுக்கு வழி வகுத்தன. இவர், உருக்கப்பட்ட பன்றி இரும்பை ஆக்ஸிஜனை கொண்டு வெப்பப்படுத்தி அழுக்குகளை நீக்கி அதன் மூலம் எஃகை தயாரிக்கும் முறையை உருவாக்கினார். வலிமை மிகுந்த பாலங்கள், கட்டடங்கள், தண்டவாளங்கள் உலகுக்கு கிடைத்தன.

சர்க்கரையை எளிமையாக தயாரிக்கும் தொழிற்சாலை நடைமுறைகளை உருவாக்கினார். மொத்தம் 129 பேடண்ட்கள் இவர் வசமிருந்தது. வார்ப்புகளின் மூலம் பல உருவங்களை ஒரே வடிவத்தில் தயாரிக்கும் முறையும் இவர் தந்த கொடையே.அவரின் பிறந்தநாள்  (ஜன.19).

>>>ஜேம்ஸ் வாட்...

 
நீராவி இன்ஜினில் மாற்றங்கள் கொண்டுவந்த, உலகையே திருப்பிபோட்ட அற்புத பொறியியல் வல்லுநர். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்காட்லாந்து வறுமையில் வாடியது. இவரின் குடும்பமும் அவ்வாறே துன்பப்பட்டது. இளவயதில் இருந்தே வடிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் வரைய தாளில்லாமல் தரையில் வரைந்து பழகினார்.

உடல் நலம் அடிக்கடி சரியில்லாமல் போய்விடும் இவருக்கு. பல பிள்ளைகள் கொள்ளை நோயில் இறப்பதை கண்ட இவர் அம்மா பள்ளிக்கு இவரை அனுப்ப மாட்டார். பள்ளிக்கல்வியே தடைபட்டது. வேலையை செய்ய விலங்குகள், மனிதர்கள் பயன்படுத்தபட்ட பொழுது பல மாற்றங்கள் வந்தது. 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து மேம்பட்ட நீராவி இயந்திரத்தை பதினான்கு ஆண்டுகள் கழித்து உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.

படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதற்கு பின் கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பில் சேர்ந்தார் அவர். தாமஸ் நியூகோமன் உருவாக்கிய இயந்திரம் பல்வேறு குறைகளோடு இருந்தன. ஆற்றல் விரயம் வேறானது. இவர் வீட்டில் கெட்டிலை அடுப்பில் வைத்திருந்த பொழுது நீராவி கெட்டிலின் மூடியை தூக்கி நிலையாக நிற்க வைப்பதை பார்த்தார். விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார்.

பதினேழு ஆண்டு உழைப்பில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'centrifugal governor' அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. தொழிற்புரட்சியின் மாபெரும் பங்களிப்பை தந்தவர் வாட் என நாடே கொண்டாடியது. ஏழ்மை, உடல்நலமின்மை ஆகியனவற்றை வென்று சாதித்த அவரை நினைவுகூர்வோம். அவரின் பிறந்தநாள்  (ஜன.19).

>>>இரண்டாவதாக வருவோரை உலகம் கண்டுகொள்ளாதா?

 
பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) எனும் சாகசக் காதலர் பிறந்த தினம் இன்று (ஜன.20). நிலவில் முதன்முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும். அவருடன் நிலவுக்கு பயணம்போன இரண்டாவதாக இறங்கி நடந்த ஜீவன் இவர்தான்.

அமெரிக்காவில் பிறந்த இவர் படிப்பில் செம சுட்டியாக இளம் வயதிலேயே இருந்தார். ராணுவத்துக்கு போய் சாகசம் செய்யவேண்டும் என அவர் எண்ணியபொழுது அப்பா தடுத்து பொறியியல் பக்கம் அனுப்புகிறார். படித்து முடித்துவிட்டு விமானப்படையில் சேர்கிறார் இவர். மாபெரும் சாகசங்கள் புரிகிறார். கொரியாவின் போர்களத்தில் எண்ணற்ற சேதத்தை எதிரி படைகளுக்கு உண்டு செய்கிறார். இவரே இரண்டு மிக் விமானங்களை வீழ்த்துகிறார்.

பிறகு, நாசாவில் இணைந்தார். அப்பொழுது விண்வெளிக்கு பயணம் போன குழுவில் பல்வேறு சோதனைகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளியில் ஆறு மணிநேரம் நடந்தார் - அதுவே அந்த காலத்தில் விண்வெளியில் நடக்கப்பட்ட அதிகபட்ச கால அளவு. பின் அப்போல்லோ விண்கலத்தில் நிலவுக்கு போவதற்கு இவரும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் தெரிவு செய்யபட்டார்கள். அங்கே போய் இறங்கினார்கள். முடிந்து திரும்பியதும் இருவருக்கும் விருது தரப்பட்டது.

ஆனால்,வெளிச்சம் எல்லாம் ஆர்ம்ஸ்ட்ராங் மீதே விழுந்தது. இவரை யாரும் சீண்டவில்லை. நிலவில் இரண்டாவதாக கால் வைத்தவர் என காரில் எழுதிக்கொண்டு திரிந்தார். குடித்து சீரழிந்தார். மனப்பிறழ்வுக்கு உள்ளானார். மணவாழ்க்கையும் முறிந்தது. பின் மீண்டு வந்தார். அவரின் பெயரை சின்ன வயதில் ப்ரதர் ஆல்ட்ரின் என கூப்பிடாமல் சகோதரி பஸ்ஸர் ஆல்ட்ரின் என கூப்பிட அதையே சுருக்கி பஸ் ஆல்ட்ரின் என வைத்துக்கொண்டார்.

குழந்தை போன்ற உற்சாகம் பீறிடுவதாக சொன்னார். அற்புதமான முன்னேற்ற நூல்களை எழுதினார். ஓய்ந்து போனதாக கருதப்பட்ட காலத்தில் டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்வில் பிரமாதமாக ஆடினார். அப்பொழுது வயது 58. தொண்டு நிறுவனம் தொடங்கி மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை இன்று வரை செய்து வருகிறார்.

இரண்டாவதாக வருகிறவர்களை உலகம் கண்டு கொள்ளாது என்கிற எண்ணத்தை தகர்த்தெறிந்து மீண்டு வந்து நாட்டில் பல்வேறு இளைஞர்களை ஊக்குவிக்கும் மனிதராக உருவெடுத்த அவருக்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே!

>>>மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை, பாந்தியன் சாலை, கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள மீடியா பயிற்சி மையத்தில், கை, கால் பாதிக்கப்பட்ட, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு மாத இலவச மல்டிமீடியா சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 16 முதல், 40 வயதுடையோர், இதில் பயன் பெறலாம்.
உணவு, தங்கும் இடம் ஆகியவற்றுக்கு, மாற்றுத் திறனாளிகளே பொறுப்பு. விருப்பமுள்ளவர்கள், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன், அந்தந்த மாவட்ட நல அலுவலர் முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ இம்மாதம், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>>ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

>>>வளர் இளம்பருவ மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள்: முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் வளர் இளம் பருவத்தினர், வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களால் பல்வேறான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் கவனம் சிதறுதல், தவறான வழிக்கு செல்லுதல் மற்றும் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.
எனவே, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம்(counselling centre) என்று 31 மையங்களும், சென்னையில் 3 மையங்களுமாக சேர்த்து, மொத்தம் 34 மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென 2 கோடியே 51 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறான கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35லிருந்து 58ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாராத பணியிடங்களைத் தோற்றுவிக்க அனுமதியளித்து, இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அக்கல்லூரி வளாகத்தில், 5 கோடி செலவில், 3 நிலைகள் கொண்ட, அடுக்குமாடி கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

>>>தவறவிடாதீர்... இன்று போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 20 (ஞாயிற்றுக்கிழமை) 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் மறக்காமல் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள சிறப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்குங்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...