கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குடியரசு தினம்...

நாடு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு 63 ஆண்டுகள் நிறைவுற்றது.

கடந்த 1929 லாகூர் மாநாட்டில் பூரண சுயாட்சி என்பதை நேரு முழக்கமாக வைத்து ஜனவரி 26-ஐ ஆண்டுதோறும் சுதந்திர நாளாக தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வந்தனர். மவுண்ட்பேட்டன்தான் பர்மாவில் ஜப்பானியர்களை சரணடைந்த நாளை இந்திய விடுதலை நாளாக ஆக்க, இந்த நாள் குடியரசு தினம் ஆனது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் எண்ணற்ற குறைகள் இருப்பதாக இன்றைக்கு பலபேர் சொல்லலாம். எனினும் அதன் ஆரம்பகால வரலாற்றை கவனிக்கவும் வேண்டும். எல்லாரையும் இணைத்துக்கொண்டே அது இயற்றப்பட்டது. காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள், அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள்.

பல்வேறு விவாதங்களுக்கு பிறகு, மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது. மதவாதத்தால் உடைந்து போயிருந்த நாட்டை மதசார்பற்ற நாடாக நேரு மற்றும் அம்பேத்கர் உறுதியாக நின்று ஆக்கினார்; தான் மதசார்பற்ற நாட்டை உருவாக்குவேன் என சொன்ன ஜின்னா அதை செய்யவே இல்லை என்பதை கவனிக்க வேண்டும். பழங்குடியின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது; அதை நிரந்தரமானது என அவர்கள் அறிவிக்கவில்லை. காந்தியின் கிராம ராஜ்யமும் கைவிடப்பட்டது அது கிராமங்களில் இருக்கும் சாதீய அமைப்பை வளர்த்தெடுத்து விடும் என பயந்தார்கள்.

இவ்வளவும் நடந்த பின் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கிற பொழுது இந்த நாடு பெரும்பாலான சமயங்களில் ஜனநாயகத்தை கைவிடாமலே இருந்து இருக்கிறது என்பதும், சட்டத்தின் ஆட்சி பல சமயங்களில் நிலைநாட்ட பட்டிருப்பதையும் காண வேண்டிருக்கிறது. பிரதமரையே பதவியை விட்டு விலக சொன்ன காட்சியும், முதல்வரையே அவ்வாறு சொன்ன காட்சிகளையும் நீதிமன்றம் செய்துள்ளது என்பதை காண வேண்டும்.

ஜுடிசியல் ஆக்டிவிசம் எனும் தானே முன்வந்து நீதிமன்றம் எடுத்த பல முன்னெடுப்புகள் அரசியலமைப்பு சட்டத்தின் காவலனின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்கிறது. பொறுமையாக கிடைக்கும் நீதி எல்லாருக்கும் எட்டாத நீதி, அதன் குறுக்கு வழிகள் இவற்றையெல்லாம் படிப்படியாக ஒவ்வொரு மனிதனும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் சட்டத்தின் அடிப்படை சாராம்சத்தை சமரசத்துக்கு உள்ளாக்கி கொள்ளாமல் சரிப்படுத்த வேண்டிய காலம் இது.

கனடா போலவோ, ஆஸ்திரேலியா போலவே விக்டோரியா மகாராணி வாழ்க என கோஷம் போடாமல் நமக்கான அரசியல் சட்டத்தை வார்த்தெடுத்து கொண்ட உன்னத தருணம் இந்நாள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

>>>இந்தியக் குடியரசு தினத்தையொட்டிய கூகுளின் சிறப்பு டூடுல்...


இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் இணையதளத்தில் பலர் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Google இந்தியாவில் தனது முகப்புப் பக்கத்தில் தனது DOODLE-ஐ இவ்வாறு வடிவமைத்துள்ளது.

நம் தேசிய விலங்கான புலி, தேசிய மலரான தாமரை, இந்தியா கேட் ஆகியவை அடங்கிய இந்த டூடுல் நம் இளைய சமுதாயத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

புலியின் உடலில் உள்ள வரிகளில் google என்ற எழுத்துக்களை அமைத்திருக்கிறார்கள்.

>>>உறுதிமொழி

 
இந்தியா என் நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்.

என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன்; எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

என் நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.
...............................................................
* 'கை'யைத் தூக்கி உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளுங்கள். *

>>>ஸ்டீவ் ஜாப்ஸ்-சின் ரோல் மாடல்!

 
அகியோ மோரிடா... இணையற்ற தொழில்நுட்பத்தால் உலகைப் புரட்டிய பிதாமகர். இயற்பியல் பட்டதாரியான இவர், ஜப்பானின் சார்பாக உலகப் போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார்.

பதினான்கு தலைமுறை மதுபானம் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று 375 டாலர் பணத்தோடு வெளியே வந்தார். உலகப் போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில்நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள்.

கடந்த 1946-ல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள். முதலில் மிகப் பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை. பார்த்தார் மனிதர்... பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள். மாபெரும் வெற்றி பெற்றது அது. அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி, வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள். உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்
என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.

அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சிகரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர்; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம். சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார்; நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார்; ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்காவிட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர்.

அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர். ஜப்பானியர் என்கிற பெருமையை அவர் விடவில்லை. அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார்; எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில் மக்களால் பார்க்கப்பட்டது.

தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர். தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள், ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு ரோல் மாடல். அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத் தெரியாத ஜப்பான் - அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.26).

>>>தமிழ் மாதங்கள் [Tamil Months]....

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம் )(, 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

தமிழ் மாதங்கள்

சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.
- மாதம் - இராசி
1 சித்திரை - மேடம்
2 வைகாசி - இடபம்
3 ஆனி - மிதுனம்
4 ஆடி - கர்க்கடகம்
5 ஆவணி - சிங்கம்
6 புரட்டாசி - கன்னி
7 ஐப்பசி - துலாம்
8 கார்த்திகை - விருச்சிகம்
9 மார்கழி - தனு
10 தை - மகரம்
11 மாசி - கும்பம்
12 பங்குனி - மீனம்

மாதப் பிறப்பு

ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். அது மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரிய இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும். முறைப்படி அந்த நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.

மாதங்களின் கால அளவு

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
- மாதம் இராசி நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 சித்திரை மேடம் 30 55 32 00 31
2 வைகாசி இடபம் 31 24 12 00 31
3 ஆனி மிதுனம் 31 36 38 00 32
4 ஆடி கர்க்கடகம் 31 28 12 00 31
5 ஆவணி சிங்கம் 31 02 10 00 31
6 புரட்டாசி கன்னி 30 27 22 00 31
7 ஐப்பசி துலாம் 29 54 07 00 29/30
8 கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00 29/30
9 மார்கழி தனு 29 20 53 00 29
10 தை மகரம் 29 27 16 00 29/30
11 மாசி கும்பம் 29 48 24 00 29/30
12 பங்குனி மீனம் 30 20 21 15 31
- மொத்தம் - 365 15 31 15 -

பெயர்க் காரணம்

சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

செந்தமிழ் பெயர்கள்

- மாதம் செந்தமிழ்
1 சித்திரை மேழம்
2 வைகாசி விடை
3 ஆனி ஆடவை
4 ஆடி கடகம்
5 ஆவணி மடங்கல்
6 புரட்டாசி கன்னி
7 ஐப்பசி துலை
8 கார்த்திகை நளி
9 மார்கழி சிலை
10 தை சுறவம்
11 மாசி கும்பம்
12 பங்குனி மீனம்

>>>தமிழ் ஆண்டுகள் [Tamil Years]....

உத்தம ஆண்டுகள்

  • பிரபவ
  • விபவ
  • சுக்கில
  • பிரமோதூத
  • பிரசோத்பத்தி
  • ஆங்கீரச
  • சிறிமுக
  • பவ
  • யுவ
  • தாது
  • ஈசுவர
  • வெகுதானிய
  • பிரமாதி
  • விக்ரம
  • விச
  • சித்திரபானு
  • சுபானு
  • தாரண
  • பார்த்திப
  • விய

மத்திம ஆண்டுகள்

  • சர்வசித்த
  • சர்வதாரி
  • விரோதி
  • விகிர்தி
  • கர
  • நந்தன
  • விசய
  • சய
  • மன்மத
  • துன்முகி
  • ஏவிளம்பி
  • விளம்பி
  • விகாரி
  • சார்வரி
  • பிலவ
  • சுபகிருது
  • சோபகிருது
  • குரோதி
  • விசுவாவசு
  • பராபவ

அதம ஆண்டுகள்

  • பிலவங்க
  • கீலக
  • சவுமிய
  • சாதாரண
  • விரோதி கிருது
  • பரிதாபி
  • பிரமாதீச
  • ஆனந்த, இராகூச
  • நள
  • பீங்கள
  • காளயுக்தி
  • சித்தார்த்தி
  • ரவுத்ரி
  • துன்மதி
  • துந்துபி
  • உருத்ரோத்காரி
  • இரத்தாகூசி
  • குரோதன்
  • அகூய

60 - வருடங்களின் பெயர் பட்டியல்

தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன.
எண். பெயர் பெயர் (ஆங்கிலத்தில்) கிரெகொரியின் ஆண்டு
எண். பெயர் பெயர் (ஆங்கிலத்தில்) கிரெகொரியின் ஆண்டு




01. பிரபவ Prabhava 1987–1988
31. ஹேவிளம்பி Hevilambi 2017–2018
02. விபவ Vibhava 1988–1989
32. விளம்பி Vilambi 2018–2019
03. சுக்ல Sukla 1989–1990
33. விகாரி Vikari 2019–2020
04. பிரமோதூத Pramodoota 1990–1991
34. சார்வரி Sarvari 2020–2021
05. பிரசோற்பத்தி Prachorpaththi 1991–1992
35. பிலவ Plava 2021–2022
06. ஆங்கீரச Aangirasa 1992–1993
36. சுபகிருது Subakrith 2022–2023
07. ஸ்ரீமுக Srimukha 1993–1994
37. சோபகிருது Sobakrith 2023–2024
08. பவ Bhava 1994–1995
38. குரோதி Krodhi 2024–2025
09. யுவ Yuva 1995–1996
39. விசுவாசுவ Visuvaasuva 2025–2026
10. தாது Dhaatu 1996–1997
40. பரபாவ Parabhaava 2026–2027
11. ஈஸ்வர Eesvara 1997–1998
41. பிலவங்க Plavanga 2027–2028
12. வெகுதானிய Bahudhanya 1998–1999
42. கீலக Keelaka 2028–2029
13. பிரமாதி Pramathi 1999–2000
43. சௌமிய Saumya 2029–2030
14. விக்கிரம Vikrama 2000–2001
44. சாதாரண Sadharana 2030–2031
15. விஷு Vishu 2001–2002
45. விரோதகிருது Virodhikrithu 2031–2032
16. சித்திரபானு Chitrabaanu 2002–2003
46. பரிதாபி Paridhaabi 2032–2033
17. சுபானு Subhaanu 2003–2004
47. பிரமாதீச Pramaadhisa 2033–2034
18. தாரண Dhaarana 2004–2005
48. ஆனந்த Aanandha 2034–2035
19. பார்த்திப Paarthiba 2005–2006
49. ராட்சச Rakshasa 2035–2036
20. விய Viya 2006–2007
50. நள Nala 2036–2037
21. சர்வசித்து Sarvajith 2007–2008
51. பிங்கள Pingala 2037–2038
22. சர்வதாரி Sarvadhari 2008–2009
52. காளயுக்தி Kalayukthi 2038–2039
23. விரோதி Virodhi 2009–2010
53. சித்தார்த்தி Siddharthi 2039–2040
24. விக்ருதி Vikruthi 2010–2011
54. ரௌத்திரி Raudhri 2040–2041
25. கர Kara 2011–2012
55. துன்மதி Dunmathi 2041–2042
26. நந்தன Nandhana 2012–2013
56. துந்துபி Dhundubhi 2042–2043
27. விஜய Vijaya 2013–2014
57. ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043–2044
28. ஜய Jaya 2014–2015
58. ரக்தாட்சி Raktakshi 2044–2045
29. மன்மத Manmatha 2015–2016
59. குரோதன Krodhana 2045–2046
30. துன்முகி Dhunmuki 2016–2017
60. அட்சய Akshaya 2046–2047

>>>ஜனவரி 26 [January 26]....

நிகழ்வுகள்

  • 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.
  • 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.
  • 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
  • 1788 - ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
  • 1841 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
  • 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
  • 1924 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
  • 1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
  • 1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
  • 1950 - இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
  • 1952 - பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.
  • 1958 - ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
  • 1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
  • 1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
  • 1983 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
  • 1992 - ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
  • 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

பிறப்புகள்

  • 1904 - சோன் மக்பிறைட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)
  • 1911 - பொலிக்காப் கூஷ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1993)
  • 1921 - அகியோ மொறிடா, ஜப்பானியத் தொழிலதிபர் (இ. 1999)

இறப்புகள்

  • 1823 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)
  • 1895 - கெய்லி, கணிதவியலர் (பி. 1821)

சிறப்பு நாள்

  • உலக சுங்கத்துறை தினம்
  • ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா நாள் (1788)
  • இந்தியா - குடியரசு நாள் (1950)
  • உகாண்டா - விடுதலை நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...