கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 02 [February 02]....

நிகழ்வுகள்

  • 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
  • 1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
  • 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.
  • 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
  • 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
  • 1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
  • 1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
  • 1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.
  • 1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • 1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
  • 1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.
  • 1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
  • 1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.
  • 1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
  • 1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.
  • 1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1998 - பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1522] - லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)
  • 1882 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)
  • 1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி

இறப்புகள்

  • 1907 - திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)
  • 1970 - பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
  • 1980 - வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
  • 1987 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)

சிறப்பு நாள்

  • உலக சதுப்பு நில நாள்

>>>மாறுகிறது பிளஸ் 2 பாடத்திட்டம்: கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு

தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல் புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன் கருத்துகள் கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை பெரிய கடைவீதி புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், ஊட்டசத்து, கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கருத்துகள் கேட்கப்பட்டன.
மாதிரி பாடதிட்டத்தை கல்வியாளர்கள் படித்து பார்த்து, அதில் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள், நீக்கப்பட வேண்டிய பகுதிகளை குறிப்பெடுத்து கொடுத்தனர். கல்வியாளர்கள் கொடுக்கும் குறிப்புகளை கொண்டு, வரைவு பாட திட்டம் உருவாக்கப்பட்டு, அவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு, கலாச்சாரம், கணக்கு பதிவியல், வணிகவியல், சிறப்பு தமிழ், புவியியல் ஆகிய பாடங்களுக்கும் கருத்து கேட்கப்படுகிறது.

>>>இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

 
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

>>>இன்டெலிஜென்ஸ் பீரோ...!

இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாகஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் மத கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் . சமிபத்தில் தாண்டவம் என்ற திரை படத்தில் கூட நடிகர் விக்ரம் ரா வில் பனி புரிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே.

>>>பிப் :1 இன்று, கல்பனா சாவ்லா நினைவு தினம்!

 
கல்பனா சாவ்லா... கொலம்பியா விண்வெளிக் கலத்தில் ஏழு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி. தன் முதல் பயணத்திலேயே 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மைல்கள் கடந்து பூமியை சுற்றிச் சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்திருக்கிறார்.

STS-87 - பயணத்தின்போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து 'ஸ்பார்டன்' என்ற செயல் குறைப்பாட்டிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்திருக்கிறார்.

கடந்த 2003 ம் ஆண்டு STS-107 என்ற கொலம்பியா விண்ணோட்டத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

>>>ஐ.நா.வில் ஒலிக்கும் ஸ்வர்ணக் குரல்!

'இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை.'

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.
''இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டது இந்தக் குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993-ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கிவருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே'' என்கிறார் குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சூரியசந்திரன்.

குழந்தைத் திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது.

'ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்படித் தேர்வுசெய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவரை யாராவது ஒருவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உடனே எதிர்க்கலாம். அதற்கான காரணம் ஏற்புடையதாக இருக்கவேண்டும். இப்படி ஒருமனதாக அனைவரும் தேர்வுசெய்யப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படும்'' என்கிறார் ஸ்வர்ணலஷ்மி.

இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வுசெய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்களை மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வுசெய்வார்கள். இந்த மாநிலப் பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நிதி அமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார் ஸ்வர்ணலஷ்மி.

''நிதி அமைச்சராகச் செயலாற்றிய ஸ்வர்ணலஷ்மியின் திறமையைப் பாராட்டித் தற்போது பிரதமராக நியமித்து இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் ஐ.நா.சபையின் அறிவிப்பு வந்தது. இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. சபையில் குழந்தைகள் பிரச்னைகளையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் உலக அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். அதில் ஸ்வர்ணலஷ்மியும் ஒருவர்'' என்கிறார் சூரியசந்திரன்.

''பயமும் தயக்கமும்தான் நம்முடைய மிகப் பெரிய எதிரிகள். ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின்போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்'' என்கிற ஸ்வர்ணலஷ்மி ஐ.நா.சபையில் பேசத் தயாராகிவருகிறார்.

'' 'உனக்கு ஐ.நா.சபையில் பேசும் வாய்ப்புக் கிடைச்சு இருக்கு’ என்று சொன்னபோது நான்  ரொம்ப சந்தோஷப்பட்டேன். என் தன்னம்பிக்கையை வளர்த்த குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர்கள், துணைநின்ற ஆசிரியர்கள், ஊக்கம்கொடுத்த நண்பர்கள், பெற்றோர்  அனைவரும் பெருமைப்படும் விதமாக ஐ.நா.சபையில் பேசுவேன். நமது இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் விவாதத்தை எடுத்துரைப்பேன்'' என்கிறார்.

ஸ்வர்ணாவின் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்கட்டும்!

>>>பிப்ரவரி 01 [February 01]....

நிகழ்வுகள்

  • 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
  • 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
  • 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
  • 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.
  • 1864 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
  • 1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.
  • 1884 - ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
  • 1893 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.
  • 1908 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர்.
  • 1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.
  • 1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1924 - சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
  • 1946 - நோர்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
  • 1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார்.
  • 1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.
  • 2003 - கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
  • 2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
  • 2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
  • 2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1905 - எமிலியோ செக்ரே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1989)
  • 1931 - போரிஸ் யெல்ட்சின், ரஷ்ய முன்னாள் அதிபர் (இ. 2007)

இறப்புகள்

  • 1958 - கிளிண்டன் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)
  • 1964 - பம்மல் சம்பந்தர், தமிழ் நாடகத்துறையின் முன்னோடி (பி. 1873)
  • 1976 - வேர்னர் ஐசன்பேர்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1901)
  • 1976 - ஜோர்ஜ் விப்பிள், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1878)
  • 1986 - அல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1902)
  • 2003 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (பி. 1961)

சிறப்பு நாள்

  • ஐக்கிய அமெரிக்கா - கறுப்பின வரலாறு மாதம் ஆரம்பம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருபட்பால் அதிகாரம்: புல்ல...