கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 17 [February 17]....

நிகழ்வுகள்

  • 1753 - சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.
  • 1788 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
  • 1854 - பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
  • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
  • 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.
  • 1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
  • 1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.
  • 1890 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
  • 1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
  • 1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
  • 1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.
  • 1957 - மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1962 - மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.
  • 1979 - மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
  • 1990 - இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • 1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.
  • 2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
  • 2006 - பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.

பிறப்புகள்

  • 1888 - ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969)
  • 1927 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)

இறப்புகள்

  • 1956 - எஸ். வையாபுரி, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)
  • 1970 - ஷ்மூவெல் யோசெப் ஆக்னன், நோபல் பரிசு பெற்ற இசுரேல் எழுத்தாளர், (பி. 1888)
  • 1986 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895)

>>>காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')

 
மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

>>>உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

 

ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .

ஞாபகம் குறித்து சில தகவல்கள் :

நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம் ,திரும்ப திரும்ப செய்தல்

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் .

4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள்
உதரணம் news - north ,east,west,south

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை

8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளுதில் செரிக்கும் உணவை செர்த்துகொள்வது நல்லது.

>>>உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?

 

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம் லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

# ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ
்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

# எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

# அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

# செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

#நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

# இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

# சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

>>>போன்சாய் மரங்கள்

 
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைக் குறிப்பிட்ட முறைப்படியான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், மாறுபட்ட தோற்றத்துடனும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும். சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
எந்த வகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை.

நிறைய பேர் நினைப்பது போல, போன்சாய் என்பது இயற்கையிலேயே குட்டியாக வளரும் மரம் அல்ல. அதுவும் சாதாரண மரம் தான், ஆனால் குட்டியாக இருக்கும் படி அது பழக்கப் படுத்தப் படுகிறது. அதற்காக அதை நாம் கொடுமைப் படுத்துவதாக பொருளல்ல; வழக்கம் போல அதற்கும் நாம் தண்ணீர், காற்று, மண், சூரிய ஒளி, இன்னும் பிற தேவையான சத்துக்கள் தருகிறோம். ஆனால், பெரிதாக வளர விடாமல், அவ்வப்போது செதுக்கி விடுகிறோம். அது தான் இதன் சூட்சுமம்.

போன்சாய் மரங்கள், அரை அடி உயரத்தில் இருந்து, மூன்று அடி உயரம் வரை வளர்க்கப் படுகிறது. இம்மரங்களிலும், பூப்பூக்கும், காய் காய்க்கும். ஆனால், மரத்தை அவ்வப்போது செதுக்காவிட்டால், அது பெரிய மரமாக வளர ஆரம்பித்து விடும்.

சிறிய தட்டில், குட்டியூண்டு பெரிய மரத்தைப் பார்க்கும் போது, மிக அழகாகவும், இயற்கையாகவும் தோன்றும்.
போன்சாய் மரங்களை விதை போட்டும் வளர்க்கலாம், அல்லது கட்டிங்ஸ் மூலமும் வளர்க்கலாம். ஆனால் மிக பாங்காக எல்லாம் செய்யணும். அதை செதுக்கி, இலைகளை கிள்ளி, ஒயர் போட்டு தண்டுகளை கட்டி, நாம் விரும்பிய வடிவில் கொண்டு வரணும். கொஞ்சம் தவறினாலும் செடி செத்துவிடும். அதன் வாழ்நாள் பூராவும், நம் கவனம் அதன் மேல் தேவை, இல்லாவிட்டால் பெரிதாக வளர தொடங்கிவிடும். சில மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட உயிர் வாழும்; ஆனால், எத்துணை ஆண்டுகள் என்பது முக்கியமல்ல, மரத்தில் தோற்றம், மற்றும் அது வைக்கப் பட்டிருக்கும் தொட்டியின் அழகு ஆகியவை பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று எடுப்பாக இருக்க வேண்டும்.

எந்த மரத்தை வேண்டுமானால் தேர்ந்தெடுத்து, போன்சாய் ஆக வளர்க்கலாம். ஜப்பானில், பைன், பேம்பூ, ப்ளம், கமேலியா போன்ற மரங்களை அதிகமாக வளர்க்கிறார்கள். நம்மூர் ஆல மரம், அரச மரத்தைக் கூட இவ்வாறு வளர்க்கலாம். அதிகமாக போன்சாய் மரங்கள் சூரிய ஒளியில் தான் வளர்க்கப் படுகின்றன. ஆனால் ஒரு சில மரங்கள், நிழலில் வளர பழக்கப் படுத்தப்படுகின்றன.

போன்சாய் வளர்ப்பதற்கு பெரிய செலவு ஒன்றுமில்லை. ஆனால், நிறைய பொறுமையும், விடாமுயற்சியும், டைம் மேனேஜ்மெண்டும் தேவை. இதை ஒரு ஹாபியாக செய்தால், நிச்சயம் நம்மால் முடியும்.

>>>ஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...

ஒரு படத்தில வடிவேல் அரசாங்க பஸ்ச இது உங்கள் சொத்து அப்பிடி என்று சொல்லி விப்பாரே .அத விட இன்னும் பயகரமான மோசடி பற்றிதுதான் இது அந்த பெரிய பாரிஸ் உள்ள டவரையே விலைக்கு வித்த முக்கியமா அத வாங்கின அந்த புத்திசாலி பற்றி தெரியனுமா ?தொடந்து படிங்க

வசீகரிக்கும் பேச்சு ஆற்றல கொண்ட ஒருவன்(ர்)இந்த கைங்கரியத்தை !! இலகுவாக செய்து முடித்தான் .1890 ம் ஆண்டு செகொச்லாவாகியா வில் பிறந்த இந்த விக்டர்லுஸ்டிக் (victer lustig ) பல மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய ஆற்றல கொண்டவன் ,கூடவே எப்படி ஒரு மனிதனை பேச்சின் முலமாக வசிய படுத்த முடியும் எனும் திறனையும் கொண்டவனாம் .

நியூ ஜோக் மற்றும் பாரிஸ் நகரங்களில் மக்கள் கூடும இடங்களில் தனது வாய் திறமை முலம பல சட்டவிரோதமான வியாபார விசயங்களை செய்து வந்தவன் .இவனே கள்ளமாக காசு அச்சடிக்கும் இயந்திரம் பற்றி முதல் முதலில் அக்கறையுடன் செயட்பட்ட்வன் இவன் இப்படியான இயந்திரகளை மிகவும் தந்திரமாக விற்று இத முலம பெரும் காசு பார்த்தவன் .தன்னிடம் இந்த இயந்திரம் வாங்க வருபவர்களை அழைத்து சென்று அவர்கள் முன்பேபணம் அச்சடித்து காட்டுவான் .அதுவும் ஆறு மணி நேரத்துக்குள் 100 மில்லியன் டாலர்களை அடிக்கும் என் கதை விட்டு பின் அதை அவர்குக்கு 30,0000 டொலர்களுக்கு விற்று விடுவான் .அவர்களும் இதை வாங்கி கொண்டு போய் விடுவார்கள் ஆனால் அது வெறும் 10 மில்லியன் டொலர்களை மட்டுமே அடிக்கும் .வாங்கியவர்களுக்கு தாங்கள் ஏமாற்ற பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரமுதல் வேறு ஒரு நாட்டில் இருப்பன் இவன் .

சரி சரி நாம் இப்ப ஈபில் ரவர் விசயத்துக்கு வருவம் .1925ம் ஆண்டு எப்பிடி யாரையாவது கவிழ்ப்பது என எண்ணிக்கொண்டே பத்திரிகை ஒன்றை படித்து கொண்டு இருந்த விக்டேருக்கு திடிரென ஒரு பொறி தட்டியது .ஈபில் டவேர் பராமரிப்பு சம்பந்தமாக அந்த இடத்து நகரசபையில் அலசப்பட்ட விடயமே அந்த பத்திரிகை செய்தி.அதை வைத்து கொண்டே தனது தந்திர புத்திக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான் .உடனே பழைய இரும்பு சேகரிக்கும் முகவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான் .ஈபில் டவர் பராமரிப்பில்கஸ்ரம் நிலவுகிறது .அத்துடன் அதன் உறுதியும் குலைந்து வருகிறது .எனவே அதனைபோதிய விலைக்கு விற்க முடிவு எடுத்து இருப்பதாகவும் கடிதம் பறந்தது .அதனை கடிதமும் அக்மார்க் அரச முத்திரையுடன் ,

அதை நம்பி ஆறு முகவர்கள் வந்தார்கள் அவர்களை பாரிஸில் பழைய ஹோட்டல்களில் ஒன்றான hotel de crillon அதில் வைத்து தான் தபால் தொலை தொடர்பு இணை இயக்குனர் என பீலா விட்டு மிகவும் சிறந்த ஒரு வியாபார டில் முடித்தான் .(இந்த ஈபில் டவர் பிரான்சில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சின் தேவைக்கு என உருவாக்கபட்டது என்பது கொசுறு தகவல் .

அதில் அன்று போயசியன் (andre poisson) நபர இந்த டிலை ஒத்து கொண்டு வாங்க சரி என் பட்டார்.அவனிடமும் இதை விற்க தரகு பணம் கூட வாங்கினான் இந்த விக்டர் என்றால் பார்த்து கொள்ளுங்கள் அவன் எப்படி பட்ட எம கண்டன் என்று .அவன் வாங்கிய லஞ்ச பணம் ஈபில் டவரின் விலையின் 30 % .எப்படி வியாபாரம் .பணத்தை பெற்றதும்தான் தாமதம் அவனும் அவன் செயலாளரும் !உடனே பை நிறைய பணத்துடன் வியனாவுக்கு ஓடி விட்டனர் .ஏமாற்ற பட்ட நபர அவமானம் காரணமாக போலிசுக்கு கூட அவனை பற்றி சொல்ல வில்லை .அவனின் அதிஷ்டம் தப்பி விட்டான்

ருசி கண்ட பூனை திரும்பவும் வியன்னாவில் பணம் எல்லாம் முடிந்த பின் அடுத்த ஆறு பேருக்கு கடிதம் அனுப்பினான் .திரும்பவும் பாரிஸ் வந்து .ஆனால் அதுவே அவனுக்கு ஆப்பாய் போனது சந்தேகப்பட்ட ஒரு டீலர் ரகசியமாய் போலிசுக்கு போட்டு விட போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விட்டது .1935 may 10 அன்று கைது செய்யபட்ட அவன் போலீஸ் காவலில இருந்து தப்ப முற்பட்டது வேறு கதை .1949 ம் ஆண்டு அவன் இறந்து போனான் .

>>>ஹோவர்ட் கார்ட்டர்

 
தங்கம், புதையல், மம்மி, ரகசிய வழி, விஷப்பூச்சிகள், திருடர்கள் என வாழ்க்கை முழுக்க செம த்ரில்லோடு கழித்த ஹோவர்ட் கார்ட்டர் எனும் அகழ்வராய்ச்சி நிபுணரின் இணையற்ற சாதனை நிகழ்ந்த தினம் இன்று (பிப்.16).

எகிப்தில் டூட்டன்ஹேமன் எனும் இளவயதில் மரணமடைந்த எகிப்திய இளவரசரின் கல்லறையை கண்டறிந்ததுதான் இவரின் சாதனை. அந்த மன்னனின் கல்லறையில் எண்ணற்ற புதையல் கொட்டிக்கிடப்பதாக எல்லாருக்கும் தெரியும், ஆனால் அது எங்கே இருந்தது எனத்தான் பலகாலமாக மக்கள், கொள்ளையர்கள், ஆய்வாளர்கள் என எல்லாரும் அலைந்தனர்.

இவரும் அலைந்தார். அதற்காக தன் பாட்டி கொடுத்த உளியை பல காலம் காப்பாற்றி வைத்து இருந்து பயன்படுத்தினார் என்பது அவரின் எல்லையில்லா அன்பிற்கு சாட்சி.

தங்கமும், நகைகளும் மேலும் பல பொருட்களும் உள்ளே கொட்டிக்கிடந்த இந்த கல்லறை எவ்வளவு பிரமாண்டமானது. கண்டுபிடிக்கப்பட்டு ஏறத்தாழ எட்டு வருடங்கள் ஒட்டுமொத்தமாக இந்த கல்லறையில் உள்ள பொருட்களை மீட்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க முழுக்க இந்தக் கதையை சொல்லி இன்றைய மம்மிக்களை வைத்து மிரட்டும் படத்துக்கெல்லாம் அடிகோலினார்.

‘‘உங்களின் ஆற்றல் நிலைக்கட்டும், பல்லாயிரம் வருடங்களை களியுங்கள்; கண்களில் ஆனந்தத்தை தேக்கி கொள்ளுங்கள்... இரவே உன் சிறகுகளை அழியா விண்மீன்களாக என்மீது விரிப்பாயாக!’’ எனும் வரிகள் இவரின் கல்லறையில் நமக்கான கதையை காலமெல்லாம் சொல்லுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalai Thiruvizha Competitions 2024 - State Level Winners List

  1-2ஆம் வகுப்பு 3-5ஆம் வகுப்பு 6-8ஆம் வகுப்பு  9-10ஆம் வகுப்பு மற்றும் 11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி...