கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> இதயத்தையும் குறிவைக்கும் கரோனா... ஸ்டாடின் மருந்துகளுக்கு நேரடியாக வைரஸ்களை தாக்கி அழிக்கும் திறன் உள்ளது அறியப்பட்டுள்ளது...

 


>>> காற்றின் வழி பரவும் கரோனா... முக கவசம் அணிவதில் தீவிர கவனம் தேவை...

 


>>> இன்று(29-09-2020) உலக இதய தினம் - இதயம் இதமாக இருக்க 10கட்டளைகள்...

 


>>> நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் முறை - நியாயவிலைக் கடைக்கு செல்வோர் கட்டாயம் கைபேசி எடுத்துச் செல்வது நல்லது...

 


>>> பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் விளக்கம்...

தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 நன்றி : தினமணி

>>> மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு... பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.... அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்...

 

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.09.2020(செவ்வாய்க்கிழமை)


🌹நம்மைவிட இன்னொருவர் முக்கியமாகிவிடும் போது கோபம்,விவாதம்,அழுகை இவை எதுவும் முன்னுரிமை தரப்போவதில்லை 

தன்மானத்துடன் விலகிப் போவதே சிறந்தது.!

🌹🌹போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத பாடத்தை 

பாதிக்கும் போதுதான் கற்றுக் கொள்கிறோம்.!!

🌹🌹🌹தவறுகளை தன் மீது வைத்துக் கொண்டு 

மெளனம் காப்பவர்களிடம் கவனமாக இருங்கள்.

ஏனெனில் கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் உங்களையே குற்றவாளி ஆக்கிவிடுவார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ரேங்க் பட்டியல் வெளியீடு:

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.

பொறியியல் ரேங்க் பட்டியலில் சுஷ்மிதா என்ற மாணவி முதலிடமும், நவநீதகிருஷ்ணன் என்ற மாணவர் 2வது இடமும், காவ்யா என்ற மாணவி 3வது இடமும் பிடித்துள்ளனர்.

பொறியியல் படிப்பு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை அறியலாம்.                                           🌈🌈செப்டம்பர் மாதத்தில் மட்டும் 34 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டுள்ளது.

🌈🌈பெயரில்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை வேண்டாம் -  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.

🌈🌈சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், இரண்டை வெற்றிகரமாக சீனா விண்ணிற்கு அனுப்பியிருக்கிறது. நில, நீர்வளம் மற்றும் பேரழிவுகளை கண்காணிக்கவும், வேளாண்மை மற்றும் வனவியல் தொழில்களுக்கான சேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🌈🌈சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சிறையிலுள்ள 9 காவலர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கவும் உத்தரவு

🌈🌈மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.பிரபாகரன் உச்சநீதிமன்றத்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

🌈🌈அக்டோபர் 7-ல் அ.தி.மு.க.வின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பார்கள்.

-அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி 

🌈🌈ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.  2 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

🌈🌈மறைந்த பாடகர் எஸ் பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாரத பிரதமர் மோடிக்கு கடிதம்

🌈🌈சொத்துவரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை பெறலாம்

சொத்துவரியை சரியான காலத்திற்குள் செலுத்த தவறும் பட்சத்தில் ஆண்டிற்கு 2% தண்டத்தொகை செலுத்த நேரிடும்

- சென்னை மாநகராட்சி ஆணையர்

🌈🌈மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தங்களது மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முடியாத வகையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில்  சட்டப்பிரிவு 254(2) கீழ் சட்டம் இயற்ற சோனியாகாந்தி அறிவுறுத்தல்.

🌈🌈கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு 

- அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

🌈🌈கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

🌈🌈கேட் கியூ (CatQueVirus) வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🌈🌈கேரள சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை:

கேரளாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது; பொதுமக்கள் அரசு அதிகாரிகளோடு ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் முழுமுடக்கத்தை அமல்படுத்த நேரிடும்

🌈🌈அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

👉நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம்!

🙏இருமொழி கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. 

👉மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசுக்கு கண்டனம்.

👉கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். 

👉அதிமுகவினர் அயராது பணியாற்றி மீண்டும் ஆட்சி தொடர பாடுபட வேண்டும்.

🌈🌈மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

🌈🌈யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி

🌈🌈DSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🌈🌈அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ஆதிதிராவிடர் நலத்துறை - பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

🌈🌈பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இன்று  (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

🌈🌈01.10.2020 நடைபெறுவதாக இருந்த காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டம் 09.10.2020 நடைபெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில், மாஸ் காப்பி அடித்ததாக புகார் எழுந்துள்ளது.எனவே, அதுபோன்ற விடைத்தாள்களை பிரித்தெடுத்து, மதிப்பெண் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது 

🌈🌈ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் , பணியில் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

🌈🌈ஐபிஎல் 2020 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று அறிவிப்பு.

-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🌹👉பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இன்று (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

👉கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடவகுப்புகள் நடத்தப்பட்டன

👉இந்நிலையில், கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த 24-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ‘அக்டோபர் 1-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி செல்லலாம்’ என்ற உத்தரவினை வெளியிட்டார்.

👉50 சதவீத ஆசிரியர்கள் பணிக்குவர வேண்டும், இரு அணிகளாக பிரித்து வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்பதுள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அந்த உத்தரவில் இடம்பெற்று இருந்தன.

👉கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 25-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவே 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மட்டும் அறிவித்து விட முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மேலும் குழப்பம் ஏற்பட்டது

🌹👉இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள நம்பியூர் நாச்சிபாளையத்தில் குளம் புனரமைக்கும் பணியைத்தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

👉தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று (29-ம் தேதி)முதல்வர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பது தொடர்பான தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார், என்றார்.

பள்ளிகள் திறப்பு குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவிய நிலையில், ‘29-ம் தேதி முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார்’ எனக்கூறி அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

🌈🌈கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை:-

👉நேற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 5589

சென்னையில்-1283

👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 586397 

சென்னையில்-164744

👉நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  5554 

சென்னையில் -  921 

👉நேற்று வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 530708 

சென்னையில்-150522

👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  70

சென்னையில் -13

👉நேற்று வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -   9383 

சென்னையில் - 3179

👉நேற்று வரை கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  46306

சென்னையில் -11043

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IPL Auction: Teams and Players Prices

"IPL ஏலம் : அணிகளும், வீரர்களின் விலைகளும் " IPL Auction: Teams and Players Prices 1. சென்னை சூப்பர் கிங்ஸ்  டெவோன் கான்வே (6.25 க...