>>> Click here to Download Joint Director Proceedings & Regularisation Format...
🌹ஆண்களுக்கு ஆணவம் இருந்தாலும் சரி
பெண்களுக்கு ஆணவம் இருந்தாலும் சரி
அழிவது என்னவோ
பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல
ஒரு நல்ல குடும்பத்தின் வாழ்க்கையும் தான்.!
🌹🌹தூரமாக கூட இருந்துவிடலாம்.
ஆனால் யாருக்கும் பாரமாக மட்டும் இருந்துவிடக் கூடாது.!!
🌹🌹🌹சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பைவிட.
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பே என்றும் உண்மையானது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் நிறைவு -நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🎀🎀மருத்துவ காப்பீடு துறையில் புதிய விதிமுறைகள் அமல். வரும் அக் 1 முதல் புதிய விதி முறைகள் அமுலுக்கு வருகின்றன. மருத்துவ காப்பீடு பிரீமியம் உயர்கிறது
🎀🎀10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.
🎀🎀தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
👉தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது
👉பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்
👉கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.
👉பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு
👉திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி
👉சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
👉புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்
👉உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
👉உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி
🎀🎀பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குனர்கள் மாற்றம்
👉ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குனர் வை. குமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனராக மாற்றம்
👉பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குனராக மாற்றம்.
🎀🎀அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்.
நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
👉மாணவர் சேர்க்கை இன்று 30.09.2020(புதன்கிழமை) மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள்,இன்று பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
🎀🎀புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் நலன்களுக்காக மட்டுமல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தையே பாதுகாக்கத் தான் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்
🎀🎀மெரினாவை திறக்காதது ஏன் என தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தளர்வுகளை அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும் மெரினாவை திறக்காதது என்?. மேலும் மெரினாவில் பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு கேள்வி எழுப்பினர். மேலும் மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அக்.5-ல் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
🎀🎀கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது -
ஐ.ஐ.டி. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
🎀🎀கொரோனா பாதிப்புள்ள மாணவர் சட்டப் படிப்பு பொது நுழைவுத்தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி. 🎀🎀டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக 3 ஆண்டு படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
🎀காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
🎀🎀அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்க விருப்பம்: பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோவை மாணவி தகவல்.
🎀🎀வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், உள்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனும் அம்சம் இனி இடம்பெறாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
🎀🎀சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு விதித்த தடையை கொலம்பியா மாகாண நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
🎀🎀ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
🎀🎀அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம், ஜப்பானில் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு.
அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க்குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.
🎀🎀அக்டோபர்- டிசம்பர் வரை நாடு முழுவதும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்.
🎀🎀அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதி நடைபெறவிருந்த திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு
🎀🎀தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - இந்திய தேர்தல் ஆணையம்
🎀🎀கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.9ஆம் தேதி வரை நீட்டிப்பு.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க அக்.23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்.
🎀🎀துணை ஜனாதிபதிக்கு தொற்று உறுதி என முடிவு வந்தாலும்,அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை.நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை.
- துணை ஜனாதிபதி அலுவலகம்
🎀🎀RTE - 2009 - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.
🎀🎀மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் "லோடிங் டோஸ்"... (டாக்டர்.பக்தவச்சலம், கே.ஜி.மருத்துவமனை)..
🎀🎀அக்டோபர் 2 அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 🎀🎀இன்ஸ்பயர் அவார்ட்-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🎀🎀நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் முறை - நியாயவிலைக் கடைக்கு செல்வோர் கட்டாயம் கைபேசி எடுத்துச் செல்வது நல்லது.
🎀🎀இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர இந்த ஆண்டில் மொத்தம் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது
🎀🎀அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்
🎀🎀வருமான வரி கணக்கு தாக்கல் கடந்த 3 ஆண்டுகள் தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டும் return செய்ய இன்றே கடைசி நாள். இவ்வாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர்- 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
🎀🎀'இன்டர்நெட்' வேகம் குறைவு, நெட்வொர்க் பிரச்னை காரணமாக, வகுப்புகளை முழுமையாக கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், 'ஆன்லைன்' வகுப்புகளில் நடத்தப்பட்ட பாடங்கள் முழுவதும், பள்ளி திறந்ததும், மீண்டும் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் - நாளிதழ் செய்தி
🎀🎀தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
🎀🎀ஒடிசா மாநிலத்தில் நந்தா பிராஸ்டி என்ற பெரியவர் மரத்தடியில் அமர்ந்தபடி பள்ளி மாணவர்களுக்கு 75 ஆண்டுகளாக ஒரு பைசாகூட வாங்காமல் பாடம் கற்பித்துவருகிறார் - நாளிதழ் செய்தி
🎀🎀தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம் - நாளிதழ் செய்தி.
🎀🎀ஐபிஎல் டி20 லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
🎀🎀கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை:-
👉நேற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 5546
சென்னையில் -1277
👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:
தமிழகத்தில் - 591943
சென்னையில்-166029
👉நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 5501
சென்னையில் -1119
👉நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 536209
சென்னையில்-151641
👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:
தமிழகத்தில் - 70
சென்னையில் -16
👉நேற்று வரை கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:
தமிழகத்தில் - 9453
சென்னையில் - 3195
👉நேற்று வரை கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை:
தமிழகத்தில் - 46281
சென்னையில் -11193
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை 6,967 crore worth of Rs 2,000 notes are yet to be ...