கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா தொற்றுப் பரவும்...

 கரோனா உற்றிட்ட  வைரஸ்கள் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில், ரூபாய் நோட்டுகள் வாயிலாக கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என்றும், பல்வேறு ஆன்லைன் வசதிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

நன்றி : தினமணி

🍁🍁🍁 சுயநிதி பிரிவு - PG & BT Teachers Wanted. Last Date to Apply: 12-10-2020...

 


🍁🍁🍁 Self Finance (English Medium) - PG Teachers Wanted - Last Date to Apply :12-10-2020...

 


🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை...

 


பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கலாமா என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்க பள்ளிகளுக்கு பெற்றோர் அனுமதி பெற்று வரலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. சில தினங்களில் இந்த அறிவிப்பை தமிழக அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்குவது குறித்தும், அதேபோன்று பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்படாத சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து, துறை செயலாளர் மற்றும் இயக்குனர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் உயர் அதிகாரிகளுடன் நடைபெறும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார் . இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை சென்னைக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவது குறித்தும், பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

🍁🍁🍁 ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா...

 


🍁🍁🍁 ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது...

 நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ முதன்மை தேர்வும், கடந்த செப்டம்பர் மாதம் அட்வான்ஸ்டு தேர்வும் நடந்து முடிந்த நிலையில், இந்த தேர்வை நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் எழுதினார்கள்.

தற்போது இந்த தேர்வுக்கான முடிவுகள் result.jeeadv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

🍁🍁🍁 ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.10.20...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...