>>> Click here to Download Elementary Director Proceedings...
சென்னை மாநகராட்சியில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் 46 பள்ளிகள் நவீன வசதியுடன் மறுசீரமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் அதன் உள்கட்டமைப்பை மாற்ற தனியாா் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பள்ளி வகுப்பறைகளை டிஜிட்டல் மயமாக மாற்றவும், விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 46 பள்ளிகள் ரூ. 95.25 கோடி மதிப்பில் நவீனமாக மாற்றப்பட உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் நிலைத்த, நீடித்த மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பள்ளிகளுக்கான சவால் என்ற திட்டத்தின்கீழ், பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை ரூ.76.20 கோடி நிதி உதவி அளித்துள்ளது. மீதமுள்ள தொகை சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க உள்ளன.
இந்தத் திட்டத்தின்படி, 46 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் டிஜிட்டல் வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்களுக்கான உபகரணங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளி வளாகங்கள் அனைத்தும் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றவும், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வுக் கூடங்களும் அமைக்கப்பட உள்ளன.
தலைசிறந்த நிபுணா்களைக் கொண்டு தொழிற்கல்விக்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், ஆசிரியா்களின் கற்பிற்கும் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், மாணவா்களின் அனைத்து தகவல்களும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், டேப் மூலம் கல்வி கற்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக மாணவ, மாணவியா் விகிதத்தை சமமாக வைக்க வழிவகை செய்யப்படுவதுடன், அதிக அளிவில் கல்வி தொடா்பான கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும். இதற்கான ஆய்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், முதற்கட்டமாக இப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என்றனா்.
சீா்மிகு நகரத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள 6 அம்சங்கள்
1. நவீன வகுப்பறைகள்
2.விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல்
3. டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி கற்பிக்கும் முறை
4. மாணவா்களின் தனித் திறனை வளா்த்தல்.
5. தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தல்.
6. ஆசிரியா்களுக்கான கற்பிக்கும் திறனை வளா்த்தல்.
அரசு பள்ளிகளுக்கான, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த, 2004 முதல் இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அதிக கல்வி தகுதி இருந்தும், பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாத நிலைமை உள்ளது.
இடைநிலை ஆசிரியர்களாக, பல ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களும், முதுநிலை பட்டதாரியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களும், நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து, நீதிமன்றங்களில் நுாற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், பதவி உயர்வு குறித்த வழக்குகளில், பல்வேறு உத்தரவுகளும் பள்ளி கல்வித் துறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 58 ஆயிரத்து, 118 ஆசிரியர்களுக்கு, புதிதாக பணி மூப்பு பட்டியல், 2019 ஜூலையில் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியலின் படி, ஆசிரியர்களின் பணி மூப்பு காலம் மற்றும் கல்வி தகுதி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கினால், வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என, பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
எனவே, வரும் காலங்களில் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, இந்த பட்டியலைப் பயன்படுத்தி, கருத்துரு தயாரிக்க உள்ளதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 18 வகை மூலிகை அடங்கிய சிறப்பு தேனீர் வழங்க, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
மாநிலம் முழுதும் இருந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், இங்கு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆட்கள் வருவதால், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான நிர்வாக பணிகளை, அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே முடித்து கொள்ளவும், அதற்கு மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கும் படியும், இயக்குனர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தவிர்க்க முடியாத நிலையில், சென்னை அலுவலகத்துக்கு வருவோருக்கு, முதலில், 'தெர்மல் ஸ்கேனர்' வழியாக, வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. சராசரி உடல் வெப்பநிலை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சமூக இடைவெளி அடிப்படையில், வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டு, குறுகிய நேரத்திற்குள் பணிகளை முடித்து, அனுப்புகின்றனர். வரவேற்பறையில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து, நாற்காலிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அலுவலக ஊழியர்கள், கூட்டமாக கூடி பேசவும், அரட்டை அடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்துக்கு வரும் ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, 18 வகை மூலிகை கலந்த தேனீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, இந்த தேனீருக்கு, ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தேனீரை அருந்தும் அலுவலர்களும், ஆசிரியர்களும், தங்கள் ஊர் அலுவலகங்களிலும், இந்த மூலிகை தேனீர் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...