கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் வழங்கி உதவிபுரிய இணையதளம்: 12-ம் வகுப்பு மாணவியின் நல் முயற்சி...

 


கரோனா காலம் கற்றல், கற்பித்தல் முறைகளிலும் டிஜிட்டலைப் புகுத்திவிட்டது. பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் கற்றல் முறை ஊக்குவிக்கப்படும் என்றே அரசு தெரிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத கல்வி முறையாக இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாவதில்லை. அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடும் விளிம்புநிலை மக்களுக்கு, ஆன்லைன் உபகரணங்கள் மூலம் கல்வி என்பது ஆடம்பரமாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இந்நிலையில் உதவிகள் தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் ஆகியவற்றை வழங்க இணையதளத்தை உருவாக்கி உதவி வருகிறார் சென்னையைச் சேர்ந்த குனிஷா அகர்வால். 12- வகுப்பு மாணவியான இவர், helpchennai என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கி, உதவ விரும்புவோருக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து மாணவி குனிஷா அகர்வால் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. அவர் என் அம்மாவிடம், லேப்டாப் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் தன் மகளால் கலந்துகொள்ள முடியாததைப் பற்றிக் கவலையுடன் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அம்மா வனிதா அகர்வால் தன்னிடமிருந்த பழைய லேப்டாப்பைக் கொடுத்து உதவினார். அதைப் பார்த்தபோது இதுபோல எண்ணற்ற மாணவர்கள் இருப்பார்களே, அவர்களுக்கு உதவினால் என்ன என்று தோன்றியது. அதன் நீட்சியாகத்தான் ஹெல்ப் சென்னை இணையதளம் தொடங்கப்பட்டது.

தேவையுள்ள மாணவர்கள், helpchennai இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். அதில் பெற்றோரின் வருமானம், பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சந்தேகங்களைத் தீர்க்க 99403 48747 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யலாம்.

தனித்தனியாக 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவா சக்ரா ஆதரவற்றோர் மையத்தைச் சேர்ந்த 82 மாணவர்களுக்கும் இதுவரை லேப்டாப் வழங்கியுள்ளோம்.

விரும்புவோரும் உபகரணங்களைக் கொடுத்து உதவலாம்.

ஏழை மாணவர்களுக்கு உதவ விரும்புபவர்களும் ஹெல்ப் சென்னை இணையதளம் மூலமாக எங்களுக்கு ஆன்லைன் கற்றல் உபகரணங்களையோ, பணத்தையோ அளிக்கலாம். தன்னார்வப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு நல்ல உள்ளங்கள் மூலமாக இதுவரை செல்போன், லேப்டாப், டேப் உள்ளிட்ட 200 சாதனங்கள் கிடைத்துள்ளன. சென்னை ரோட்டரி கிளப் 100 புதிய ஆன்லைன் சாதனங்களை எங்களுக்கு அளித்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் கல்வியை வழங்குபவை ஆன்லைன் வகுப்புகள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

போதிய ஆட்கள் வசதி இல்லாததால் சென்னையில் மட்டுமே ஆன்லைன் உபகரணங்களை வழங்கி வருகிறோம். என்னுடைய பெற்றோரே என்னுடைய முன்மாதிரிகள். நிறையப் பேருக்கு உதவ முடிவதைக் கண்டு என் தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார்'' என்கிறார் குனிஷா அகர்வால்.

17 வயதே ஆன 12-ம் வகுப்பு மாணவி குனிஷா அகர்வால், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

🍁🍁🍁 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்...

 


மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ப  புதிய முயற்சிகள்   கல்விக்குழு புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம் என கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்.

புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தொழில் முனைவோராக்கவும் புதிய பாடப்பிரிவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.

எனவே, தங்களின் கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய படிப்புகளின் பட்டியலை விரிவான பாடத்திட்டத்துடன் ஏஐசிடிஇ-க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி ஆலோசனை வழங்கலாம்.

புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறும் பணிகள் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என்று ஏஐசிடிஇ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

🍁🍁🍁 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம்...

 


🍁🍁🍁 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...

 


மத்திய அரசு ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு, ஏற்கனவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
அதைதொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்கப்போவதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், துணைவேந்தர் சுரப்பா தெரிவித்தது போல் நிதியைத் திரட்ட முடியாது எனவும், கடந்த நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் 350 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🍁🍁🍁 பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்...

 



பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்காக, இன்று முதல் வரும் 7-ம் தேதி  வரை, ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

🍁🍁🍁 தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு...?

 தமிழகத்தில், உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கு பிறகு, வெளியான தேர்வு முடிவுகளில் தொடர்ந்து பல்வேறு குழப்பம்,  குளறுபடி நீடித்தன. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த இறுதிப் பட்டியலில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் 1, 2 மற்றும் பூஜ்ஜியம் என்று பெற்றிருந்த நிலையில், 18க்கும் மேற்பட்டோர் முழுமையான மதிப்பெண்களை பெற்று, தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதாவது ஐந்துக்கு ஐந்து என மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இதில் பல முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும், அதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேர்வர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில், வெளியான இந்த தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

🍁🍁🍁 01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் - அரசாணை வெளியீடு...

 >>> Click here to Download G.O.No.386, Dated: 02-11-2020...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...