கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி: AICTE...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி: AICTE...
ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல்...
கொரோனா காலகட்டம் மற்றும் அது தொடர்பான ஊரடங்கு இருக்கும் நிலையில், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
தனியார் பொறியியில் கல்லூரிகளுக்கு கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாக பேராசிரியர்கள் பலர் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அன்றியோ, பேராசிரியர்களின் விளக்கங்களை கேட்காமலோ, அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் கல்வியாண்டில் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க AICTE அனுமதி...
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது. மேலும் 11 இந்திய மொழிகளிலும் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என AICTE தகவல் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் : பல்டி அடித்த ஏஐசிடிஇ - குழப்பத்தில் மாணவர்கள்...
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) திரும்பப் பெற்றுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது. வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக எடுத்து படித்தால்தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற ஏஐசிடிஇ புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை...
ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ (AICTE) புதிய சுற்றறிக்கை...
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப்பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை. எனவே , உயர்கல்வியில் கிராஸ் மேஜர் முடித்தவர்களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.
🍁🍁🍁 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்...
மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ப புதிய முயற்சிகள் கல்விக்குழு புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம் என கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்.
புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தொழில் முனைவோராக்கவும் புதிய பாடப்பிரிவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.
எனவே, தங்களின் கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய படிப்புகளின் பட்டியலை விரிவான பாடத்திட்டத்துடன் ஏஐசிடிஇ-க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி ஆலோசனை வழங்கலாம்.
புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறும் பணிகள் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என்று ஏஐசிடிஇ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
🍁🍁🍁 அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடரும் இழுபறி - உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிப்பால் மாணவர்கள் தவிப்பு...
அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பின் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஏஐசிடிஇ எதிர்ப்பு
இந்த அறிவிப்பு அரியர் வைத்திருந்த 8 லட்சம் மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்கும் பணிகளை உயர்கல்வித் துறைதீவிரப்படுத்தியது. இந்நிலையில் அரியர்பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
இளநிலை பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால்மட்டுமே முதுநிலை படிப்புக்கான சேர்க்கைக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உயர்கல்வித் துறை பின்பற்றும் விதியாகும். இதன் காரணமாக வெவ்வேறு பருவங்களில் அரியர் வைத்துள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியாத சூழல் நிலவுகிறது.
அதேபோல், முதுநிலை பட்டப்படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் பிஎச்.டி உட்பட தங்களின் உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை மாணவர்களிடம் கடும் மன உளைச்சலையும், அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்வதில் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.
மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ,எம்இ, எம்.ஆர்க் போன்ற பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் மற்றும்முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விதிகளில் திருத்தம்
அதேநேரம் அறிவித்தபடி அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால்,உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும்வரைஇந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளை மேற்கொள்ள முடியாது. இதற்கு தற்காலிக தீர்வாக நடப்பு ஆண்டு மட்டும் விதிகளில் திருத்தம் செய்து பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளஅரசு அனுமதிக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் செல்வக்குமார், ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் கூறியதாவது: அரியர் தேர்வு முடிவு நிறுத்திவைப்பால் உயர்கல்வி மட்டுமின்றி வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகளை பெற்றிருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் மாணவர்கள் பாதிப்பு
தற்போதைய சூழலில் வாய்ப்பிருந்தும் மாணவர்கள் தங்களுக்கான மாத வருவாயை பெறமுடியாத தவிப்பில் உள்ளனர். இவை பொருளாதாரரீதியாக அவர்கள் குடும்பங்களுக்கு பெரிதும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும்,பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டுபடிக்கும் மாணவர்கள் பலரின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையே பல்வேறு வெளிமாநில பல்கலை.களில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுகிறது.
எனவே, கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அரியர் மற்றும் பருவத்தேர்வில் நிலவும் சிக்கல்களைக் களைந்து அவர்களின் எதிர்காலத் திட்டங்களை நோக்கி பயணிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அதேபோல், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி பல்வேறு இறுதி ஆண்டு மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது. இம்முடிவை பல்கலை. மறுபரிசீலனை செய்வதுடன், குறைந்தது அந்த மாணவர்களுக்கான மாற்று தேர்வுகளையாவது விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...