கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 பொதுத்தேர்வு முடிவுகள் - திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி செல்வி.நந்தினி 600/600 மதிப்பெண்கள் பெற்று சாதனை (+2 Public Examination Results - Dindigul Government Aided School student Ms. Nandhini scored 600/600 marks and achieved)....

 +2 பொதுத்தேர்வு முடிவுகள் - திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி செல்வி.நந்தினி 600/600  மதிப்பெண்கள் பெற்று சாதனை (+2 Public Examination Results - Dindigul Government Aided School student Ms. Nandhini scored 600/600 marks and achieved)....






திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார்.


இன்று வெளியாகியுள்ள 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், அரசு உதவி பெறும்,  திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்களோடு  மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


Nandhini - TN 12th Results: 600-க்கு 600 மதிப்பெண்; திண்டுக்கல் கூலித் தொழிலாளி மகள்- யார் இந்த மாணவி நந்தினி?



திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று,  600 மதிப்பெண்களை வாங்கி சாதனை படைத்துள்ளார். 


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் எழுதினர்.



இந்தத் தேர்வில் நந்தினி என்னும் மாணவி 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று,  600 மதிப்பெண்களை வாங்கி சாதனை படைத்துள்ளார். 



அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார் மாணவி நந்தினி. நந்தினியின் தந்தை சரவணகுமார், தச்சு தொழிலாளியாக உள்ளார். அம்மா பாலப்பிரியா இல்லத்தரசியாக உள்ளார். இளைய சகோதரர் பிரவீன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். 



சாதனை படைத்தது குறித்துப் பேசிய மாணவி நந்தினி, ’’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது. பள்ளி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறேன். 



என் அப்பா கூலித் தொழிலாளிதான். ஆனால் படிக்க வைக்க முடியாது என்றோ, படிக்கக் காசில்லை என்று எப்போதுமே சொன்னதில்லை. என்ன விரும்புகிறோயோ அதைச் செய் என்றுதான் கூறுவார். என் அப்பாவின் உழைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். அவர் என்னைப் படிக்க வைக்கவில்லை என்றால், இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்’’ என்று மாணவி நந்தினி நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மார்ச் / ஏப்ரல் - 2023 - பொதுத்தேர்வு முடிவுகள் - மாவட்டம் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி விவரம் அறிக்கை (HSC SECOND YEAR(+2) MARCH / APRIL - 2023 - PUBLIC EXAMINATION RESULTS - DISTRICT AND SUBJECT WISE PASS RESULTS DETAILS REPORT)...


>>> மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மார்ச் / ஏப்ரல் - 2023 - பொதுத்தேர்வு முடிவுகள் - மாவட்டம் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி விவரம் அறிக்கை (HSC SECOND YEAR(+2) MARCH / APRIL - 2023 - PUBLIC EXAMINATION RESULTS - DISTRICT AND SUBJECT WISE PASS RESULTS DETAILS REPORT)...


மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மார்ச் / ஏப்ரல் - 2023 - பொதுத்தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை (HSC - SECOND YEAR (+2) MARCH / APRIL - 2023 - PUBLIC EXAMINATION RESULTS - ANALYSIS REPORT)...



>>> மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மார்ச் / ஏப்ரல் - 2023 - பொதுத்தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை (HSC - SECOND YEAR (+2) MARCH / APRIL - 2023 - PUBLIC EXAMINATION RESULTS - ANALYSIS REPORT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

+2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விவரங்கள் - மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் - அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம்(+2 Exam Results - Pass details - Virudhunagar tops with 97.85% overall pass - Tirupur tops with 96.45% in government schools)...



>>> +2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விவரங்கள் - மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் - அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம்(+2 Exam Results - Pass details - Virudhunagar tops with 97.85% overall pass - Tirupur tops with 96.45% in government schools)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2வதாக திருப்பூர் மாவட்டம் , 3வதாக பெரம்பலூர் மாவட்டம் இடம் பிடித்துள்ளது

2022-2023ஆம் ஆண்டு - +2 தேர்வு முடிவுகள் - அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் முதல் மூன்று மாவட்டங்கள் (Year 2022-2023 - +2 Exam Results - Top 3 Districts with Highest Pass Rate in Government Schools)...


2022-2023ஆம் ஆண்டு - +2 தேர்வு முடிவுகள் -   அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் முதல் மூன்று மாவட்டங்கள் (Year 2022-2023 - +2 Exam Results - Top 3 Districts with Highest Pass Rate in Government Schools)...


1.திருப்பூர் மாவட்டம் 


2.பெரம்பலூர் மாவட்டம் 


3.விருதுநகர் மாவட்டம்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் (100% Pass in 326 Government Higher Secondary Schools in Tamil Nadu - Minister Anbil Mahesh)...

 தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் (100% Pass in 326 Government Higher Secondary Schools in Tamil Nadu - Minister Anbil Mahesh)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நீட் 2023 - வினாத்தாள் விடைக்குறிப்புகள் (NEET 2023 - Question Paper with Answer Key)...


>>> நீட் 2023 - F1 வினாத்தாள் விடைக்குறிப்புகள் (NEET 2023 - F1 Question Paper with Answer Key)...



>>> நீட் 2023 - F2 வினாத்தாள் விடைக்குறிப்புகள் (NEET 2023 - F2 Question Paper with Answer Key)...



>>> நீட் 2023 - F3 விடைக்குறிப்புகள் (NEET 2023 - F3 Answer Key)...



>>> நீட் 2023 - G6 வினாத்தாள்  (NEET 2023 - G6 Question Paper)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...