கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சாக்ரடீஸ்

 
சாக்ரடீஸ்... பள்ளிக்குப் போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர். இளைஞர்களை சிந்திக்க சொல்லித் தூண்டினார். மதம், கடவுள், அரசு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார்.

எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார். ஒருவருடன் பேசும்பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார்; இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள். உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார்.

டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும், அதற்கு இவர், "எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும். அதுவே காரணமாக இருக்கலாம்" என்றார்.

தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார்; எதிலும் எதையும் வாங்கவில்லை. "ஏன்" எனக் கேட்டதற்கு, "எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன்"என்றார்.

அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள். அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார். அவர் வருகிற மாதிரி தெரியவில்லை; கிளம்ப எத்தனித்தார் அவர். நண்பரோ "அவர் கோவித்துக்கொள்வார். அரசாங்க பகை வேண்டாம்"என்றதும், "அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால், தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் "என்று விட்டு வெளியேறினார்.

மதநம்பிக்கையை கேலி செய்கிறார், இளைஞர்களைத் தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர். வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம்; ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள். கம்பீரமாக மறுத்தார்.

மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும், எதிராக 220 ஓட்டும் விழுந்தன. சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாவதாக ஏற்பாடு. சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர். சாகிற பொழுத எதற்கு இது? என கேட்டதற்கு, "சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும்!"என்றார். விஷம் கொடுக்கப்பட்டதும், வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார். "அருந்திவிட்டேன்; கால்கள் மரத்து போகிறது. இதயம் படபடக்கிறது. மயக்கமாக இருக்கிறது; போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன்" என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான்.

சாவதற்கு கொஞ்சம் முன் எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன், மறக்காமல் கொடுத்து விடு என மனைவியிடம் சொல்லி சாகும்பொழுதுகூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்.

இன்று - பிப்.15: சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தினம்.

>>>பிப்ரவரி 15 [February 15]....

நிகழ்வுகள்

  • கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
  • 590 - பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.
  • 1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.
  • 1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
  • 1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
  • 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
  • 1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
  • 1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
  • 1970 - டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
  • 1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
  • 1996 - சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
  • 1999 - குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
  • 2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)
  • 1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937)
  • 1861 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947)
  • 1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938)
  • 1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964)
  • 1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி
  • 1949 - அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)
  • 1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர்.

இறப்புகள்

  • 1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918)
  • 1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926)

>>>ஜார்ஜ் வாஷிங்டன் கேல் ஃபெரிஸ்...

 
ஜார்ஜ் வாஷிங்டன் கேல் ஃபெரிஸ் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த அற்புத மனிதர் பிறந்தநாள் இன்று (பிப்.14).

இளம் வயதில் அப்பாவோடு சேர்ந்து இயற்கையை நேசித்தார். காரணம், அப்பாவின் தொழில். அப்பா தோட்டக்கலை வல்லுநர். இயற்கையின் பிரமாண்டம் தன்னை ஈர்த்தது என சொல்லிக்கொண்டே இருந்தவர், தானே ஒரு பிரம்மாண்ட விஷயத்தை செய்யப்போகிறோம் என நம்பியிருக்க மாட்டார்.

சிவில் இன்ஜினியரான இவர் பாலம், ரயில் தண்டவாளம் கட்டும் உலோகங்களை சோதிக்கும் நிறுவனத்தை நடத்திக்கொண்டு இருந்தார். 1893-ல் உலகப் பொருட்காட்சி கொலும்பியாவில் நடக்க இருந்தது. 1889-ல் பாரீஸ் நகரத்தில் உலகப் போருட்காட்சி நடந்த பொழுது பார்வையாளர்களை கவர உருவானதுதான் ஈபிள் டவர்; அதை காலிபண்ணி அதைவிட பிரமாண்டமாக ஒரு வடிவமைப்பை உருவாக்க வேண்டும் என விழாக் குழுவினர் ஆசைப்பட்டார்கள். இவரும் விண்ணப்பித்தார்.

36 கார்கள், 40 சுழலும் நாற்காலிகள், ஒவ்வொன்றிலும் 60 பேர் என 2,160 பேர் உட்காரும் மிகப்பெரிய சுழல் சக்கரத்தை ஒன்றை வடிவமைத்தால் மக்கள் விரும்புவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த கண்காட்சியையும் பார்க்கலாம் என்றார். முதலில் இது ரிஸ்க் என மறுத்தார்கள்.

மனம் தளராமல் பல இன்ஜினியர்களின் அத்தாட்சியை பெற்று வந்தார். பல பேரிடம் கடன் பெற்று 4 லட்சம் டாலர் செலவில் அதை உருவாக்கினார்; அதற்கு பெர்ரிஸ் சக்கரம் என பெயர் வைத்தார். ஏறி மக்கள் அமர்வதற்கு காசு வாங்கிவிடலாம் என திட்டம் -அப்படியே வருமானமும் குவிந்தது. இவரிடம்தான் அதை காட்டவில்லை. 7.5 லட்சம் லாபம் வந்து தனக்கு தரவில்லை என புகார் சொல்லி இரண்டு வருடங்கள் போராடி ஓய்ந்து போனார். 1896&ல் இறந்தே போனார்.

ஒரு வருடம் அவர் சாம்பலைக்கூட பெற ஆளில்லாமல் அனாதையாகிப் போனார். 1906&ல் சக்கரம் அழிக்கப்பட்டபொழுது 25 லட்சம் மக்கள் அதில் ஏறி பயணம் போயிருந்தார்கள்.

இயற்கையின் விசித்திர விளையாட்டுகளின் முன் மனிதனின் பிரமாண்டங்கள் ஒன்றுமே இல்லை இல்லையா?

>>>ஹென்றி மாட்ஸ்லே...

 
ஹென்றி மாட்ஸ்லே... இயந்திரக் கருவி தொழில்நுட்பத்தை மாற்றுப் பாதைக்கு செலுத்திய மாமனிதர்

அப்பா தொழிற்சாலையில் வேலை பார்க்கும்பொழுது காயம் ஏற்பட்டதால் வீட்டில் முடங்கிப்போனார். கேட்ரிட்ஜ்களில் பவுடர் நிரப்புதல், தச்சர் பட்டறையில் வேலை, கொல்லர் உலையில் வேலை என ஓடிக்கொண்டு இருந்தார். பன்னிரண்டு வயதிலேயே இந்த ஓட்டம் தொடங்கி விட்டது .

நீரியல் அழுத்தியை உருவாக்கிய பிரம்மாவிடம் இவர் வேலைக்கு சேர்ந்தார். 18 வயது பையன்தானே என முதலில் அலட்சியமாக பார்த்தார் அவர். இவர் ஒரு பூட்டை வடிவமைத்து அதை திறப்பவருக்கு நல்ல சன்மானம் என்றார்; 47 வருடங்கள் அச்சவால் அப்படியே இருந்தது. பிரம்மாவின் தொழிற்சாலையில் எண்ணற்ற பூட்டுகளை உருவாக்கி விற்பனையை பெருக்கினார்.

சறுக்கு பகுதி, முன்னேற்ற திருகாணி, லேத் ஆகியவை தனித்தனியே பயன்பாட்டில் இருந்தன. ஒரு இயந்திரத்தின் பாகங்களை வெட்டி உருவாக்க அதை ஒரு ஆள் லேத் முன் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் துல்லியமான வெட்டுகள் உண்டாகாமல் இருந்தன. இவர் மேற்சொன்ன மூன்றையும் கச்சிதமாக ஒருங்கிணைத்து சாதித்தார். துல்லியமான வெட்டோடு பாகங்கள் உருவாக ஆரம்பித்தன. இயந்திர உற்பத்தியில் பெரும் புரட்சி உண்டானது.

இவர் பிரம்மாவிடம் தனக்கான சம்பளத்தை எற்றித்தர சொன்னார். அவர் மறுக்கவே தனி தொழிற்சாலை ஆரம்பித்தார். கப்பல் கட்டுமானத்துக்கு மரப்பாகங்களை வெட்டிதரும் கருவியை வடிவமைத்தார். அதற்கு முன் 110 திறன் வாய்ந்த ஆட்கள் செய்த வேலையை வெறும் 10 குறைந்த திறன் கொண்ட மனிதர்களை கொண்டு வேலையை இன்னமும் துரிதமாக முடிக்கும் வேலையை இது செய்தது.

உலகின் மிகப்பெரிய நீராவி கப்பலுக்கு இன்ஜின் தயாரித்து கொடுத்தார். மிகப் பெரிய சுரங்கப்பாதையை இரண்டு நகரங்களுக்கு இடையே வடிவமைத்து கொண்டிருக்கும்பொழுதே இறந்தார். மரணத்துக்கு பின் அதை சாதித்தார்கள்.

ஹென்றி மாட்ஸ்லே... இயந்திரக் கருவி தொழில்நுட்பத்தின் தந்தை நினைவு தினம் இன்று (பிப்.14)

>>>டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

 
வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph.

>>>மனித மூளையும் அதன் செயல்திறனும்..!

 
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

>>>பல் சொத்தை....

 
பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

பல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.

1. பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

2. மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

3. காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

4. பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும்.

5. அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.

6. ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

7. ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

8. அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

9. சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

10. அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.

11. தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

12. ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

13. த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

14. ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

15. ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி:
ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் :சூது குற...