கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஹென்றி மாட்ஸ்லே...

 
ஹென்றி மாட்ஸ்லே... இயந்திரக் கருவி தொழில்நுட்பத்தை மாற்றுப் பாதைக்கு செலுத்திய மாமனிதர்

அப்பா தொழிற்சாலையில் வேலை பார்க்கும்பொழுது காயம் ஏற்பட்டதால் வீட்டில் முடங்கிப்போனார். கேட்ரிட்ஜ்களில் பவுடர் நிரப்புதல், தச்சர் பட்டறையில் வேலை, கொல்லர் உலையில் வேலை என ஓடிக்கொண்டு இருந்தார். பன்னிரண்டு வயதிலேயே இந்த ஓட்டம் தொடங்கி விட்டது .

நீரியல் அழுத்தியை உருவாக்கிய பிரம்மாவிடம் இவர் வேலைக்கு சேர்ந்தார். 18 வயது பையன்தானே என முதலில் அலட்சியமாக பார்த்தார் அவர். இவர் ஒரு பூட்டை வடிவமைத்து அதை திறப்பவருக்கு நல்ல சன்மானம் என்றார்; 47 வருடங்கள் அச்சவால் அப்படியே இருந்தது. பிரம்மாவின் தொழிற்சாலையில் எண்ணற்ற பூட்டுகளை உருவாக்கி விற்பனையை பெருக்கினார்.

சறுக்கு பகுதி, முன்னேற்ற திருகாணி, லேத் ஆகியவை தனித்தனியே பயன்பாட்டில் இருந்தன. ஒரு இயந்திரத்தின் பாகங்களை வெட்டி உருவாக்க அதை ஒரு ஆள் லேத் முன் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் துல்லியமான வெட்டுகள் உண்டாகாமல் இருந்தன. இவர் மேற்சொன்ன மூன்றையும் கச்சிதமாக ஒருங்கிணைத்து சாதித்தார். துல்லியமான வெட்டோடு பாகங்கள் உருவாக ஆரம்பித்தன. இயந்திர உற்பத்தியில் பெரும் புரட்சி உண்டானது.

இவர் பிரம்மாவிடம் தனக்கான சம்பளத்தை எற்றித்தர சொன்னார். அவர் மறுக்கவே தனி தொழிற்சாலை ஆரம்பித்தார். கப்பல் கட்டுமானத்துக்கு மரப்பாகங்களை வெட்டிதரும் கருவியை வடிவமைத்தார். அதற்கு முன் 110 திறன் வாய்ந்த ஆட்கள் செய்த வேலையை வெறும் 10 குறைந்த திறன் கொண்ட மனிதர்களை கொண்டு வேலையை இன்னமும் துரிதமாக முடிக்கும் வேலையை இது செய்தது.

உலகின் மிகப்பெரிய நீராவி கப்பலுக்கு இன்ஜின் தயாரித்து கொடுத்தார். மிகப் பெரிய சுரங்கப்பாதையை இரண்டு நகரங்களுக்கு இடையே வடிவமைத்து கொண்டிருக்கும்பொழுதே இறந்தார். மரணத்துக்கு பின் அதை சாதித்தார்கள்.

ஹென்றி மாட்ஸ்லே... இயந்திரக் கருவி தொழில்நுட்பத்தின் தந்தை நினைவு தினம் இன்று (பிப்.14)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளி...