கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜார்ஜ் வாஷிங்டன் கேல் ஃபெரிஸ்...

 
ஜார்ஜ் வாஷிங்டன் கேல் ஃபெரிஸ் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த அற்புத மனிதர் பிறந்தநாள் இன்று (பிப்.14).

இளம் வயதில் அப்பாவோடு சேர்ந்து இயற்கையை நேசித்தார். காரணம், அப்பாவின் தொழில். அப்பா தோட்டக்கலை வல்லுநர். இயற்கையின் பிரமாண்டம் தன்னை ஈர்த்தது என சொல்லிக்கொண்டே இருந்தவர், தானே ஒரு பிரம்மாண்ட விஷயத்தை செய்யப்போகிறோம் என நம்பியிருக்க மாட்டார்.

சிவில் இன்ஜினியரான இவர் பாலம், ரயில் தண்டவாளம் கட்டும் உலோகங்களை சோதிக்கும் நிறுவனத்தை நடத்திக்கொண்டு இருந்தார். 1893-ல் உலகப் பொருட்காட்சி கொலும்பியாவில் நடக்க இருந்தது. 1889-ல் பாரீஸ் நகரத்தில் உலகப் போருட்காட்சி நடந்த பொழுது பார்வையாளர்களை கவர உருவானதுதான் ஈபிள் டவர்; அதை காலிபண்ணி அதைவிட பிரமாண்டமாக ஒரு வடிவமைப்பை உருவாக்க வேண்டும் என விழாக் குழுவினர் ஆசைப்பட்டார்கள். இவரும் விண்ணப்பித்தார்.

36 கார்கள், 40 சுழலும் நாற்காலிகள், ஒவ்வொன்றிலும் 60 பேர் என 2,160 பேர் உட்காரும் மிகப்பெரிய சுழல் சக்கரத்தை ஒன்றை வடிவமைத்தால் மக்கள் விரும்புவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த கண்காட்சியையும் பார்க்கலாம் என்றார். முதலில் இது ரிஸ்க் என மறுத்தார்கள்.

மனம் தளராமல் பல இன்ஜினியர்களின் அத்தாட்சியை பெற்று வந்தார். பல பேரிடம் கடன் பெற்று 4 லட்சம் டாலர் செலவில் அதை உருவாக்கினார்; அதற்கு பெர்ரிஸ் சக்கரம் என பெயர் வைத்தார். ஏறி மக்கள் அமர்வதற்கு காசு வாங்கிவிடலாம் என திட்டம் -அப்படியே வருமானமும் குவிந்தது. இவரிடம்தான் அதை காட்டவில்லை. 7.5 லட்சம் லாபம் வந்து தனக்கு தரவில்லை என புகார் சொல்லி இரண்டு வருடங்கள் போராடி ஓய்ந்து போனார். 1896&ல் இறந்தே போனார்.

ஒரு வருடம் அவர் சாம்பலைக்கூட பெற ஆளில்லாமல் அனாதையாகிப் போனார். 1906&ல் சக்கரம் அழிக்கப்பட்டபொழுது 25 லட்சம் மக்கள் அதில் ஏறி பயணம் போயிருந்தார்கள்.

இயற்கையின் விசித்திர விளையாட்டுகளின் முன் மனிதனின் பிரமாண்டங்கள் ஒன்றுமே இல்லை இல்லையா?

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...