கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>''பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி... யார்?''

 
''சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால், அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி. சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.

அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!''

>>>ஜப்பானில்....

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது

>>>இந்தியாவில் தட்டம்மை மரணங்கள் அதிகமாக இருக்க காரணம் ?

 
முதலில் தட்டம்மை என்றால் என்ன என்பதை பாப்போம் தட்டம்மை சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.

தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.

சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களை தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான தேசிய போலியோ ஒழிப்புத்திட்டத்தின் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சுரேந்திரன் அவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்புக்கள் வலுவாக இல்லாததால் எல்லா குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பு மருந்து அளிப்பது என்கிற இலக்கு முழுமையாக எட்டமுடியாமல் இருப்பதாக தெரிவிக்கிறார்.

மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான தேசிய போலியோ ஒழிப்புத்திட்டத்தின் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சுரேந்திரன் அவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்புக்கள் வலுவாக இல்லாததால் எல்லா குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பு மருந்து அளிப்பது என்கிற இலக்கு முழுமையாக எட்டமுடியாமல் இருப்பதாக தெரிவிக்கிறார்.கண்டிப்பாக நம்ம குழந்தைகளுக்கு முக்கியமான தடுப்புசிகள் டாக்டருடைய பரிதுரை படி போடவேண்டும் .

>>>காவல் நிலையத்தின்(போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய நிலை..!

 
எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம்... அங்குள்ள காவல் நிலையம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்... நம்புங்கள்... பத்திரப் பதிவுத் துறை, விற்பனை வரித் துறைகளைவிட காவல் துறையில் 'மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை...?

தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள்... பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப் பஞ்சாயத்தும் லஞ்சமும்கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்... போலீஸாரைப் பொறுத்தவரை பொன் முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடைமுறைகளில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந்தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரில் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த் தரப்பு... இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்களுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவுசெய்யப்படா மலேயே போகும். ஒருவேளை போலீஸ் வற்புறுத்தியும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற்கெல்லாம் அசரவே மாட்டார்கள்.

எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். 'ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர். இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். அது நிலையத் தின் அனுபவசாலிக்குக் கைவந்த கலை. உதாரணமாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506 (1)ல் பதிவுசெய்தால் ஸ்டேஷனில் இருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.

கைதுக்கும் காசு!
பதிந்த எஃப்.ஐ.ஆர். மீது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யாமல் இருக்கவும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரிடம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம்சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண்டும்.

ரெக்கவரி ரீல்!
மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடு போன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்புத் துலக்கி மீட்கும் கடமைஆற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு வழக்கும் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய்விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க்க விறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார்கள்.

எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போடுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, 'சிறப்பு விசாரணை’ மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண்மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை தான் கைவரிசை காட்டிய இடங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல் நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லையில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? திருடன் நகையை விற்ற நபர்களிடம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பார்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்றுதிரட்டினால், 200 பவுனுக்குக் குறையாமல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.
''அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணுக்குக் கல்யாணம்கிறீங்க...

நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அமவுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங்களுக்குச் சரிக்கட்டிடலாம்'' என்பார்கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களையோ ஆயிரங்களையோ பெற்றுக் கொண்டு... கட்டக் கடைசியாகத்தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30 பவுன் திருடுபோனதாகப் பதிவுசெய்து... அதையும் வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, 'இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மைதான்!’ என்றுஆமோதித்தார்கள். அட... ஆண்டவா!

ஏன் இந்தக் கொள்ளை?

காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத் துக்கு மட்டுமே காவலர்கள் இப்படி வசூல் வேட்டை நடத்துவது இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கிறார்கள்.

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இருக்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவுக்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே. குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற போக்குவரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டுமே அரசின் அளவுகோல்.

விழிபிதுங்கும் கூட்ட நெரிசலில் நகரப் பேருந்துகளில் அக்யூஸ்டை அழைத்துச் செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடைநிலைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.
இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்துவிடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ... மோப்பம் பிடிக்கவோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக்குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் 'மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படியெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர் கள் இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செலவுகளெல்லாம் போலீஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.

காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுபவர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கும்.

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள். காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்... அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.

நன்றி: ஆனந்தவிகடன்.

>>>மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..!

 
மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500.

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உருவாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் பயிற்சி மையத்தை பற்றி சொன்னால் மூக்கின்மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் மும்பையில் இதுதான் இப்போதைய டாப் பிசினஸ். 1999-ம் ஆண்டு பிச்சை தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் மும்பையில் தட்டும் கையுமாக அலைந்தவர்களை போலீசாரும், அதிகாரிகளும் ஓடி ஓடி பிடித்தனர். அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லை குறைந்தபாடியில்லை. புதிதுபுதிதாக வர ஆரம்பித்தார்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவாகி வருகிறார்கள்? யார் இவர்களை உருவாக்குவது என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார் ஒரு பத்திரிகை உளவாளி. அழுக்குத் தலை, கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரர்களுடன் ஊடுருவினார். மாறு வேடத்தில் சென்று திரட்டிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சித் தகவல்: மும்பை தாராவி, மால்வானி பகுதிகளில் பிச்சை எடுப்பது எப்படி என்று பயிற்சி தர ஒரு கும்பலே இருக்கிறதாம். இந்த கும்பலின் தலைவர்கள் ‘குரு’ என்று அழைக்கப்படுகின்றனர். எச்சைக் கையால காக்கா ஓட்டாத கருமியாக இருந்தாலும் அவரை விடாப்பிடியாக சுற்றிவந்து பிச்சை வாங்குவது எப்படி என்ற டெக்னிக்தான் இங்கு அளிக்கப்படும் முதல் பயிற்சி.

போலீசோ அல்லது வேறு யாராவதோ துரத்தினால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற தற்காப்பு கலையும் கற்றுத்தரப்படுகிறது. அப்ரன்டிஸ்டுகளாக சேர்பவர்கள், முதலில் சாப்பாடு கூடையைத்தான் தூக்க வேண்டும். நிரந்தரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்கும் தங்கள் கூட்டத்தை சேர்ந்தவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க பயிற்சிதானாம். மாற்றுத் திறனாளிகளுக்கு நடுரோட்டில் பரிதாபமாக உருண்டு புரண்டு பிச்சை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சிக்கு முடிந்ததும் ஏதாவது ஒரு சாலையை அவர்களுக்கு ஒதுக்குவார்கள். அங்கு சுற்றித் திரிந்து பிச்சை எடுக்க வேண்டும். ஓடி, உருண்டு, கத்திக்கத்தி சேர்த்த பணத்தை பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் மாதிரி, ஆங்காங்கே சில கண்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். வசூலில் ஏதாவது சுருட்ட நினைத்தால் அவ்வளவுதான்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கே ஏக கிராக்கி. சில பெண்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத கைக்குழந்தை என்றால் ஒருநாள் வாடகை ரூ. 100. ஒரு வயது குழந்தையென்றால் ரூ. 50, மூன்று முதல் 5 வயது வரை ரூ. 30 வாடகையாக தரப்படுகிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தால் வசூல் கொட்டுகிறதாம். மாலையில் கைநிறைய காசோடு திரும்பும்போது பயிற்சி மையத்தில் ஏக வரவேற்புதான். வசூலாகும் தொகையை எல்லாரும் கொண்டுவந்து தந்ததும் எண்ணும் பணி நடக்கிறது.

அதில் ஒரு பகுதியை போலீஸ், உள்ளூர் ரவுடிகளுக்கு மாமூல் தர ஒதுக்கி வைக்கப்படுகிறது. மும்பை முழுவதும் சிக்னல்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக தலா ரூ. 500 தரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 15 கோடியை வசூலித்து ‘குரு’வின் காலில் கொட்டுகின்றனர். முதலீடே இல்லாமல் தர்ம பிரபுக்களின் தயவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘தொழிலதிபர்களை’ போலீசாரும் கண்டுகொள்வதில்லை. ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மூலம் ஏராளமானவர்களை பிடித்து பாதுகாப்பு இல்லங்களில் அடைத்தோம். ஆனாலும் புற்றீசல்போல் இந்த கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது’’ என்கின்றனர் போலீசார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...