கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்ந்தது

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக பெறும் முன்பணத்தொகை உச்சவரம்பு, 15 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டும்போது, அதற்காக குறைந்த வட்டியில், எளிய தவணையில் செலுத்தும் வகையில் முன்பணம் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், அரசு ஊழியர்களுக்கு, ஆறு முதல் 15 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதேபோல், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, 7.5லிருந்து 25 லட்ச ரூபாய் வரை, இக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இத்தொகை வீடு கட்ட போதுமானதாக இல்லை. எனவே, இதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமென, அரசு ஊழியர்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

அரசு அறிவிப்பு : இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், நடப்பு நிதி ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில், 247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக, நிர்வாக ரீதியான அரசாணையை, வீட்டுவசதித் துறை செயலர் பணிந்திர ரெட்டி நேற்று பிறப்பித்தார்.
அரசாணை விவரம் : பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடனாக பெறும், முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், அகில இந்திய பணி பிரிவு அதிகாரிகளுக்கான உச்சவரம்பு, 25லிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்வு, இந்த ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலாக்கப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் அப்படியே தொடரும். அதே சமயத்தில், நடப்பு நிதி ஆண்டில் இவ்வசதியை பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் குறித்து, நிதித்துறை மூலம் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET 2025 Paper 2 (Social Science) Results

        TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025 ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - சமூக அறிவியல் - தேர்வு முடிவுகள் வெளியீடு TN T...