கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்


கரூர் மாவட்டம் வெள்ளியணைக்கு அருகில், நேற்று மாலை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கல்லூரி பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்றபோது, சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதியதில் 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த விவரம் பின்வருமாறு;



கரூர் மாவட்டம் க‌.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், நேற்று கல்லூரி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் பெரியசாமி கல்லூரிப் பேருந்தை ஓட்டி வந்தார். ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வந்த சரக்கு ரயில் , பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விபத்து நடந்ததும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




18 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.



குளத்தூர் பகுதி லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால், பேருந்து அந்த லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. அப்போது ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது. இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA Election 2026 - Leading Status

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்  TNLA Election 2026 - Leading Status இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்...