கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொறியியல் சேர்க்கைக்கு இன்று தரவரிசை பட்டியல்

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை இன்று காலை வெளியிட்டது.
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.
நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ரேண்டம் எண்&' 25ம் தேதி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 9:30 மணிக்கு, தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பல்கலைக்கழக தேர்வு மையத்தில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தரவரிசை பட்டியலை வெளியிடுவார் என தெரிகிறது. "கட்-ஆப்&' 200ல் துவங்கி, விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தரவரிசை வெளியிடப்படும். ஜூலை 5, 6 மற்றும் 7ம் தேதிகளில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கு, 7 முதல் 11ம் தேதி வரையும்; மாற்றுத் திறனாளி மாணவருக்கான கலந்தாய்வு, 12ம் தேதியும் நடக்க இருக்கின்றன. பொதுப்பிரிவு கலந்தாய்வு, 13ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடக்கிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...