கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விடுபட்ட பதிவுதாரர்களுக்கு டி.ஆர்.பி., மீண்டும் வாய்ப்பு

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்காக, ஜூலை 1ம் தேதி, மீண்டும் ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
பதிவுமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். இதில், விடுபட்ட பதிவுதாரர்களுக்காக, 23, 24ல், சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை, டி.ஆர்.பி., நடத்தியது. இதிலும், 500 பேர் பங்கேற்கவில்லை.
பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனம் என்பதால், இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், பிறகு போட்டித் தேர்வு மூலமே, தேர்வு பெற வேண்டிய நிலை, பதிவுதாரர்களுக்கு உருவாகும். 
இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் மற்றும் பதிவுமூப்பு பட்டியலில் விடுபட்டவர்கள் இருந்தால், அவர்கள், ஜூலை 1ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...