கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது - மத்திய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள்

"வங்கியில் கல்விக் கடன் பெறுவது மாணவரின் உரிமை.கடன் கேட்டு வரும் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.வங்கி தலை வர்கள் பொது துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசியதாவது:
மக்களிடம் புழங்கும் பணம் அவர்களின் தேவை தவிர, பிற நேரங்களில் வங்கிகளில் இருப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை தனிநபர்களிடம் இருந்து வருகிறது. இந்த பணத்தை வங்கிகளுக்கு வரவழைக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.தயாரிப்பு துறை மீண்டும் எழுச்சி காண, நுகர்வோர் சாதன கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்.
மேலும், சுலபமாக கடனை திரும்பச் செலுத்த வசதியான, மாத தவணை திட்டத்தை வங்கிகள் நடைமுறைபடுத்த வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்களின் குறுகிய கால விவசாயக் கடனை, நீண்ட நாள் கடன் திட்டங்களாக மாற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 5.75 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை, 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட கடன், சரிவர திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கடன் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது.
ஏ.டி.எம்.,:வங்கித் துறை,ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.நாட்டில் தற்போது 63 ஆயி ரம் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்.,) உள்ளன. இதை, அடுத்த இரண்டு ஆண்டு களில் இரு மடங்காக உயர்த்த வங்கிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பணம் வழங்குவது மட்டுமின்றி, பணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் நவீன வசதி கொண்டதாகவும் ஏ.டி.எம்.,கள் இருக்க வேண்டும். இதனால் வங்கித் துறையிலேயே பணம் நிலையாக இருக்கும்.முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், நமது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் என அனைத்து மட்டங்களிலும், முதலீடுகள் சீரமைக்கப்பட வேண்டும்.
பிரச்னைகள்:வங்கித் தலைவர்களுடனான சந்திப்பில், எரிபொருள் வினியோக ஒப்பந்தம், ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யம், மாநில மின் வாரியங்கள் குறித்த காலத்தில் பணம் செலுத்தாதது உட்பட, தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர். தடைக்கற்களாக உள்ள இப் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
முதலீட்டு சக்கரம் சுழலத் தொடங்கி, முதலீட்டு இன்ஜின் இயங்கத் தொடங்கினால், பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விடும். கடன் தேவைப்படும் துறைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
மாத தவணை:நடுத்தர வர்க்கத்தினர், கடனுக்கான மாத தவணை தொகை உயர்ந்து, பணம் செலுத்தும் காலம் நீடித்து வருவது குறித்து புகார் தெரிவிக்கின்றனர். நுகர்வோர் சாதனங்களை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், சாதனங்கள் வாங்குவதை ஒத்தி வைக்கும் போக்கு காணப்படுகிறது.இது, தொழில்துறையின் வளர்ச் சிக்கு உகந்தது அல்ல. முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, மக்களுக்கு நுகர்வோர் சாதனங்களை வாங்குவதில் ஊக்கம் பிறக்கும். இது, தயாரிப்பு துறை என்ற இன்ஜின் செயல்பட வழி வகுக்கும்.
மாதாந்திர தவணை தொகை, சுலபமாக செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள், இரு சக்கர வாகனங்கள், கார், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மிக்சி, கிரைண்டர்கள் உள்ளிட்டவற்றை சுலபமாக வாங்குவர்.
இது, தயாரிப்பு துறை, சுணங்காமல் செயல்படவும், பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து இத்தகைய சாதனங்களை தயாரிக்கவும் துணை புரியும். இதனால், உதிரி பாகங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
கார் கடன்:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை குறைத்துள்ளது. இவ்வங்கியை, இதர வங்கிகளும் பின்பற்ற வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஏழு ஆண்டு கால கார் கடனுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கு, மாத தவணையாக 1,766 ரூபாய் நிர்ணயித்திருந்தது.
இதையடுத்து இவ்வங்கியின் கார்கடன் மூலம்,நாள்தோறும் 400 கார்கள் விற்பனையாயின. பின்னர்,மாத தவணை தொகை 1,725ஆக குறைக்கப்பட்டதால், நாளொன்றுக்கு கார் விற்பனை 700 ஆக உயர்ந்தது. பின்பு, மாத தவணை 1,699 ரூபாயாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து, நாளொன்றுக்கு கார் விற்பனை 1,200 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...