கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் நியமனம்

பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.
ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.
இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை ...