கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>செப். 20ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விடுமுறை குறித்த முடிவை பள்ளிக் கல்வித்துறை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்பு அரசுக்கு விஷயம் தெரிந்ததும், வேலைநிறுத்தத்திற்கு அரசே ஆதரவு தெரிவித்ததைப் போல் ஆகிவிடும் என்பதால், விடுமுறை அறிவிப்பைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுங்கள், என பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டதாக துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: 20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும். காலாண்டுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...