கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி

நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான, ஏழு மாத காலத்தில், அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்திலிருந்து, வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறியோர் எண்ணிக்கை, 32.10 கோடியாக உள்ளது என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில், அலைபேசி சாதனங் களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 91.40 கோடி என்ற அளவில் உள்ளது. "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம், பல்வேறு நிறுவனங்களின், 122 தொலைத்தொடர்பு உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து, எண்களை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்ற ஜூலை மாதத்தில், கர்நாடகாவில் தான், அதிக அளவில், அதாவது 72 லட்சம் வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றியுள்ளனர். இதையடுத்து, ஆந்திரா (57 லட்சம் வாடிக்கையா ளர்), கர்நாடகா ,(56 லட்சம் வாடிக்கையாளர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சென்ற ஜூலை மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 5.93 கோடி வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றாமல், மற்ற நிறுவனங்களின் இணைப்பை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என, "டிராய்' தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...