கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிறப்பு தேர்வுக்கு இனி ஆன்-லைன் விண்ணப்பம்

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் ஆன்-லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.
எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல் ஆன்-லைன் மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...