கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

 

 மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநில திட்ட இயக்ககம்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006


அனுப்புநர்

திருமதி.மா.ஆர்த்தி.இ.ஆ.ப.

மாநிலத் திட்ட இயக்குநர் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 

சென்னை 600 008


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண். 3701/C7 /MLM /ஒபக/2026, நாள்: 16.02.2026


அய்யா அம்மையீர் 

பொருள்:


17 FEB 2025


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


பார்வை

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்


2. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நகஎண். 022696/2/2025. 10.02.2026


பார்வை-2ன் படி கண்டுள்ள கடிதத்தின் படி 2025-26-ஆம் கல்வியாண்டு 100 நாட்கள் அறைகூவல் மதிப்பீடு 14000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல், பெருக்கல். வருத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை சோதித்து அறிவதற்கான மதிப்பீடு வினாத்தாள் (Assessment Tool மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


வஎண்.  மதிப்பீடு செய்யப்படும் நாள் வகுப்பு பாடம் மாணவர் எண்ணிக்கை



1)  18.02.2026   1 முதல் 3    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்


2)  20.02.2026   4மற்றும் 5    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்



பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நகல்


மாநில திட்ட இயக்கு 226


தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்.


கிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (ஒபசு) அவர்களின் செயல்முறைகள்


ந.க.எண்.119/MLM/ஒபக/2025 நாள்:17.02.2026


(நகல்) சென்னை-6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.3701/C7/MLM/ஒபக/2026 நாள். 02.2026-னை இத்துடன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாராக் கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார வள மைய (பொ) மேற்பார்வையாளர்களுக்கு தகவலின் பொருட்டும் தக்க நடிவடிக்கையின் பொருட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது இணைப்பு-பார்வை கடிதம்


முதன்மை அலுவலர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, ஓசூர்.


பெறுதல்: மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி),


2.அணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.


3.அனைத்து வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளர்கள். 

4.சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்.


நகல்


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

   மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings >>> தரவிறக்கம் செய்...