கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அறிவியல் ரீதியான மொழி ஆய்வுகள் : துணைவேந்தர் வலியுறுத்தல்

""மொழியியல் துறையில் அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என்று மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி வலியுறுத்தினார். இப்பல்கலை மொழியியல் துறை மற்றும் தேசிய நுண்தேர்வு மையம் (மைசூர்) சார்பில் "சமச்சீர் கல்வி- தமிழ் பாடநூல் மதிப்பீடு' தொடர்பான தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது. துறை தலைவர் ரேணுகா தேவி வரவேற்றார்.

துணைவேந்தர் கல்யாணி தலைமை வகித்து பேசியதாவது: இந்திய மொழிகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. மொழியியல் தொடர்பான ஆய்வுகள், அறிவியல் ரீதியாக அமைய வேண்டும். மனித வாழ்வியல் முறைகளை படிப்பதில், மொழிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மொழியியல் ஆய்வு முடிவுகள் என்பது சமுதாயம், கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாற்று தாக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையும் ஆய்வுகள் மாணவர் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். தேர்வுகளில் மதிப்பீடு என்பது அவசியம். வினா தாள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விடைத்தாள் தயாரிப்பதற்கும் கொடுக்கப்படும், என்றார்.

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் பேசியதாவது: தரமான கல்வி என்ற நோக்கத்தில் தான் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதற்கு பதிலாக, மாணவர்கள் புரிந்து படித்து, அவர்களின் தனி திறனை வளர்க்கும் விதமாக தற்போதைய சமச்சீர் பாட முறை அமைந்துள்ளது. பள்ளி கல்வி துறை தரமான மாணவர்களை உருவாக்கினால்தான் உயர்கல்வி தரமானதாக அமையும். எனவே, பள்ளி கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகள் இதுபோன்ற கருத்தரங்குகள் முன்எடுத்துசெல்ல வேண்டும் என்றார். தேசிய நுண்தேர்வு மைய அதிகாரி இளங்கோவன், சிண்டிகேட் உறுப்பினர் சாரதாம்பாள் பேசினர். உதவி பேராசிரியர் முனியன் நன்றி கூறினார். மொழியியல் துறை ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...