கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிறப்பு மென்பொருள் பொருத்தாத மடிக்கணினி: மன வருத்தத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சிறப்பு மென்பொருள் பொருத்தப்படாத, மடிக் கணினிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள, சிறுமலர் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளியில் மடிக் கணினி வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், 24 காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 16 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், அமைச்சர் வளர்மதி, மடிக் கணினிகளை வழங்கினார். இந்த மடிக் கணினிகளில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியான, ஜாஸ், என்.வி.டி.ஏ., ஆகிய சிறப்பு மென்பொருள்கள் பொருத்தப்படவில்லை. இதனால், மடிக் கணினி பெற்ற மாணவர்கள், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிறப்பு மென்பொருள், மடிக் கணினியில் பொருத்தப்பட்டு இருந்தால், ஒவ்வொரு எழுத்தையும், அவர்கள் தட்டச்சு செய்யும் போது, அந்த மென்பொருள் குரல் எழுப்பும். இந்த ஒலி மூலம், மடிக் கணினியில் தட்டச்சு செய்தல், இயக்குதல் உள்ளிட்ட செயல்களை, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எளிதாக செய்ய முடியும்; மடிக் கணினியை விரைவாக இயக்க முடியும். இது குறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, உயரதிகாரிகளிடம் கேட்ட போது, "மென்பொருளை வடிமைக்கும் வேலைகள், விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் பணிகள் முடிந்தவுடன், மாணவர்களிடம் ஒப்படைப்போம்' என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்

  Earned Leave Surrender Application - Covering  Letter + New Format ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்...