கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பணிமாறுதல், சம்பள பிரச்னையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

"பணிமாறுதல், சம்பளம் தொடர்பான வேண்டுகோளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்,' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரையில் இந்த ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் 2009ல், இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பின் அடிப்படையில் நியமித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, வேறு மாவட்டத்திற்கு செல்லக்கூடாது, என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது. தற்போது, இதை நீக்க அரசு முயற்சிக்க வேண்டும் என 7 ஆயிரம் பேர், அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பும் இடத்திற்கு பணிமாறுதல் பெறும்போது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் பலர் உள்ளனர். இருந்தும் நான்கு ஆண்டுகளாக அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அடுத்த பிரச்னையாக, சம்பள விகிதத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்தாவது ஊதியக்குழுவில் "பி' பிரிவில் இருந்த எங்களுக்கு, 6வது ஊதியக்குழுவில் "டி' பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் எங்களைவிட ஒருநாள் முன்னதாக பணிநியமனம் செய்யப்பட்டவர், ரூ.11 ஆயிரம் அதிகமாக சம்பளம் பெறுகிறார். பெற்றோரை கவனிக்க இயலாது, தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றும் எங்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். சம்பள வேறுபாட்டையும் களைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...