கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேரளாவில் தனியார் விமான நிலையம் துவக்கம்

நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் விமானநிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கேரளாவின் பட்டணம்‌திட்டா மாவட்டம் ஆரண்முலாவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. கே.ஜி.எஸ்.ஆரண்முலா சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு ஏர் போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் அதிகாரிகள் குழு பார்வையிட்டனர். முன்னதாக தனியார் விமான நிலையத்தின் அதிகாரியான நந்த குமார் கூறுகையில் சபரி மலை திருவிழா துவங்கும் நேரத்தில் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் பக்தர்கள் விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள வசதியாக அமையும் என தெரிவித்தார். இந்நிலையில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவி்த்தது குறித்து கருத்து தெரிவித்த அவர் ஐக்‌கிய நாட்டு வளர்ச்சித்திட்ட சார்பில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை கவனத்தில் ‌கொண்டு விமானநிலையம் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு ஏற்கன‌வே நிலம் கையகப்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் யாரும் இடம் பெயர்ந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட வில்லை என தெரிவித்துளளார்‌. இந்த விமான நிலைய திட்டத்தில் மாநில அரச பங்குதாரராக சேர்த்துக்கொள்ளப்பபட வில்லை எனவும் அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...