கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு விடுதிகளுக்கும் சிலிண்டர் விலை உயர்வு

அரசு மாணவர் விடுதிகளுக்கு வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், ஒதுக்கப்படும், உணவு செலவுக்குள், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை என 2,000க்கும் மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன. இதில், தங்கி படிக்கும் ஒரு மாணவருக்கு காய்கறி, பருப்பு, எரிவாயு செலவு உட்பட கல்லூரி விடுதி என்றால் மாதம் ரூ.750, பள்ளி விடுதி என்றால் மாதம் ரூ.650 வீதம், உணவுச் செலவாக அரசு வழங்குகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு, அரசு விடுதிகளையும் பாதித்துள்ளது. இதுவரை விடுதிகளுக்கு ரூ.390க்கு வழங்கப்பட்ட மானிய சிலிண்டருக்கு பதிலாக, இனி வர்த்தக சிலிண்டர், ரூ.1045க்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, விடுதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சராசரியாக நூறு மாணவர்கள் உள்ள ஒரு விடுதியில், மாதம் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் தேவைப்படும். விடுதிகளுக்கு அரசு வழங்கும் உணவு செலவில் எவ்வித மாற்றமும் அறிவிக்கவில்லை. "அரசு வழங்கும் பணத்தை சிலிண்டருக்கு மட்டுமே கொடுத்துவிட்டால், மாணவர்களுக்கு உணவு எப்படி சமைப்பது" என்று, விடுதி காப்பாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில துணை செயலாளர் ஜான் கூறுகையில், "தற்போது வழங்கப்படும் உணவு செலவு தொகையை, அண்மையில் தான் அரசு உயர்த்தியது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு எங்களுக்கு சிக்கலாய் மாறியுள்ளது. ஒரு சிலிண்டருக்கு உயர்த்தப்பட்டுள்ள 655 ரூபாயை, அரசு ஏற்க வேண்டும்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை

SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை SIR - Is your name in the draft voter list? - How to find ou...