சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், 10ம்
வகுப்பு மற்றும், பிளஸ் 2 படித்து, 2011-12ம் ஆண்டு அரசு தேர்வுகளில்,
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்க, 3.50 லட்சம் ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. வனத் துறையால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினர் நலப்
பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்
பெறும் பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. கடந்த
கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் பயின்று தேர்வில், முதல் மூன்று
இடங்களை பெறுவோருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பத்தாம் பகுப்பில்
முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு, தலா, 25 ஆயிரம், இரண்டாம் இடம்
பிடிப்போருக்கு, தலா, 20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்போருக்கு, தலா, 15
ஆயிரம் ரூபாய் தரப்படும். இதே போல், பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும்
மாணவர், மாணவிக்கு, தலா, 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய், என்ற
அடிப்படையில், பரிசு வழங்கப்படுகிறது.
வேலூர் மண்டலத்தில், வனத் துறை பள்ளிக்கு இவ்வாய்ப்பு இத்தடவை கிடைத்திருக்கிறது. இத்தடவை கூடுதலாக ஒரு மாணவி பரிசு பெறும் தகுதி பெற்றிருக்கிறார். அதனால், கூடுதல், 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற வனத்துறை கோரிக்கையை அரசு ஏற்று, 3.50 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.