கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>827 பேருக்கு மீண்டும் கலந்தாய்வு : அண்ணா பல்கலை அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஓ.சி., பிரிவில், 827 பேருக்கு, பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுகிறது. அதன்படி, பொறியியல் சேர்க்கையில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால், இந்த பிரிவில், 50 சதவீதம் பின்பற்றப்பட வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதன்படி, 19 சதவீதம், ஓ.சி., பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்த இடங்களை நிரப்ப, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓ.சி., பிரிவில் வரும், 827 பேருக்கு, 31ம் தேதி, அண்ணா பல்கலையில், பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: ஓ.சி., பிரிவில், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர் தான் வருவர். எனவே, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. இந்த மாணவர் அனைவரும், வேறொரு கல்லூரியில் சேர்ந்திருப்பர்; அண்ணா பல்கலையிலேயே, ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்திருக்கலாம். மறு கலந்தாய்வில், கல்லூரியை மாற்றவும், விரும்பிய பாடப் பிரிவில் சேர்வதற்கும், வாய்ப்புகள் உள்ளன. ஓ.சி., பிரிவில், காலியாக உள்ள பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளின் விவரங்களை, அழைப்புக் கடிதத்துடன் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Paper 2 எழுதுவதற்கு தடையில்லா சான்று பெற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

    TET II எழுதுவதற்கு தடையில்லா சான்று பெற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் : ✏️ விண்ணப்பக்கடிதம் ✏️ TET notification page ✏️ X stan...