பொறியியல், மேலாண்மை, கட்டடக்கலை மற்றும் பார்மசி போன்ற தொழில்முறை படிப்புகளை வழங்குவதில், தமிழகம் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தம் 33 மாநிலங்களில், பொறியியல், மேலாண்மை, கம்ப்யூட்டர்
அப்ளிகேஷன், கட்டடக்கலை, ஹோட்டல் மேலாண்மை, டிப்ளமோ மற்றும் பார்மசி போன்ற
தொழில்முறை படிப்புகளை வழங்குவதில் தமிழகம் 2ம் இடம் வகிக்கிறது.
தமிழகத்தில், இதுபோன்ற படிப்புகளின் மொத்த மாணவர் சேர்க்கை 5,31,986.
முதலிடத்தில், 6,91,237 மாணவர்களுடன், ஆந்திரா உள்ளது.
கடந்த ஆண்டு, மேற்கூறிய தொழில்முறை படிப்புகளில் 52,506 இடங்கள்
அதிகரிக்கப்பட்டன. இதன்மூலம், அதிகளவு பொறியாளர்களையும், மேலாண்மை
பட்டதாரிகளையும் உருவாக்கும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாமிடம் பெற்றது.
தமிழகத்தில், 516 பொறியியல் கல்லூரிகளும், 487 பாலிடெக்னிக்
கல்லூரிகளும் உள்ளன. நாட்டில் வழங்கப்படும் ஒட்டுமொத்த தொழில்முறை
கல்வியில், 15.4% பங்கை தமிழகம் கொண்டுள்ளது.
அதேசமயம், டெல்லி, அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மணிப்பூர்,
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில், தொழில்முறை படிப்புகளில்
மாணவர்கள் சேர்வது குறைந்துள்ளது. மேலும், திரிபுரா, டாமன் அன்ட் டயூ,
அருணாச்சல் பிரதேஷ், சண்டிகர் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகள்
ஆகியவற்றில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் எந்த
மாற்றமுமில்லை.