கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புதுச்சேரி பல்கலையில் பழைய புத்தகங்கள் இலவசமாக வழங்க எதிர்ப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை, இலவசமாகக் கொடுக்கும் முடிவிற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தில், ஆனந்தரங்கம் பிள்ளை நூலகம் உள்ளது. சர்வதேச தரத்திலான இங்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட, பலதுறை நூல்கள், 31 மின் ஆய்வு இதழ்களை பராமரிக்கின்றனர். பல்கலை மாணவர்கள் மட்டுன்றி, பிற மாநில ஆய்வு மாணவர்களும் குறிப்பு எடுத்துச் செல்கின்றனர். புதுமையான பரிந்துரை: இங்குள்ள பழைய புத்தகங்களைப் பற்றி ஆராயக் குழு ஏற்படுத்தினர். அவர்கள் நூலகத்தில் உள்ள, பழைய புத்தகங்களை பார்வையிட்டு, அகடமி கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பராமரிக்க முடியாத புத்தகங்களை, மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, அப்புறப்படுத்தி விடலாம் என, புதுமையான பரிந்துரை செய்திருந்தனர். இதற்கு, பல்கலைக் கழக நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. மாணவர்களுக்குத் தேவையான புத்தகம் இருந்தால், அதன் பெயரை எழுதிக் கொடுத்து விட்டு இலவசமாகப் பெறலாம் என, அறிவித்தனர். கொந்தளிப்பு: இந்த விசித்திரமான அணுகுமுறை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகத்தையும், நூலகத்தையும் தொடர்பு கொண்டு, இத்திட்டத்தை உடனே நிறுத்துமாறு, எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: மிகப் பழமையான, அரிய நூல்கள் பல உள்ளன. இவற்றில் பல மீண்டும் அச்சில் வருமா என்பது சந்தேகம். அவை வெளியில் கிடைப்பதும் அரிது. அவற்றை இலவசமாகக் கொடுத்து, அழித்து விட்டால், ஆய்வு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். சிதம்பரம் ராஜா முத்தையா நூலகத்தில் பராமரிக்கும் நூல்கள் கிழிந்தாலும், அப்படியே வைத்துள்ளர். அவற்றை ஸ்கேன் செய்து, மீண்டும் உயிர் தருகின்றனர். அது போல், இங்கே செய்ய வேண்டும். இதற்கு, அதிக செலவாகாது. தனி நபர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதை விட, துறை நூலகங்களுக்குக் கொடுத்தால், அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற வாசகங்களை வாகனங்களில் ஒட்டினால் மே 2 முதல் அபராதம்...

  PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை... மே 2 முதல் இதுபோன்ற வாசகங்களை வாகனங்கள...