கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி கிடைக்காதவர்கள் குமுறல்

சிறப்பு ஆசிரியர் பணிக்கு, 10 மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை.
அரசுப் பள்ளிகளில், 1,020 பட்டதாரி விளையாட்டு ஆசிரியர்கள் உட்பட, 1,500 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, 2011 டிசம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இப்பணி முடிந்து, 10 மாதங்களாகியும், பணி வழங்கப்படவில்லை.
ஆனால், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்த, முதுகலை பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணியிடங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறித்த விவரத்தை அரசு சேகரிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்"  என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மகிழ் முற்றம் House System நோக்கங்கள் & படிவங்கள்

  மகிழ் முற்றம் House System நோக்கங்கள் & படிவங்கள் Goals of Magizh Mutram House System & Formats >>> தரவிறக்கம் செய்ய இங்க...