தமிழகத்தில்
நிலவும் மின்வெட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும்
பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது; குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு
வினியோகிக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாவட்டம்தோறும்
சீருடை தைப்பதற்காக, கூட்டுறவு சங்கங்களும், தாலுகா அளவில் அதன் கிளைகளும்
உள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள், சங்கத்தில் உறுப்பினர்களாக
சேர்த்து, அரசு பள்ளி சீருடைகளை தைத்து கொடுக்கின்றனர். ஒரு சீருடை தைக்க,
17 ரூபாய் வழங்கப் படுகிறது. நடப்பாண்டில், ஆண்டுக்கு நான்கு, "செட்'
சீருடை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 24 ஆயிரம் பேர்,
கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள நிலையில், நடப்பாண்டில், 500 பேர்
புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். ஒரு உறுப்பினர், மூன்று நாட்களில், 100
செட் சீருடை தைக்க காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க, தையல்
இயந்திரத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை
தவிர, பிற மாவட்டங்களில், தினமும், 14 முதல், 16 மணி நேரம் வரை நிலவும்,
தொடர் மின் வெட்டால், அதிகாரிகள் வழங்கும் கெடுவுக்குள், சீருடை தைக்க
முடிவதில்லை. இதனால், பாதி கல்வியாண்டு நிறைவடையும் தருவாயிலும் கூட, பல
பள்ளிகளில், முதல் செட் சீருடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீருடை
தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு
பிரச்னையால், 100 சீருடை தைக்க, ஒரு வாரமாகிறது. அதிகாரிகளின் கெடுபிடியால்
பணிகளை நிறைவு செய்ய முடியாமல் திணறுகிறோம்' என்றனர். கூட்டுறவு சங்க
அதிகாரி ஒருவர் கூறியதாவது: உறுப்பினர்கள் குறித்த நேரத்தில், சீருடை
தைத்து வழங்காததால், பள்ளிகளுக்கு வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
முதல் செட் சீருடை, அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம்
செட் சீருடை வழங்குவதில், 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மின்வெட்டு
பிரச்னை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...