கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>போர்ப்ஸ் கல்வியாளர் பட்டியலில் 2 இந்தியர்களுக்கு இடம்

அமெரிக்காவின், "போர்ப்ஸ்" பத்திரிகை நேற்று வெளியிட்ட, உலகின் சிறந்த, 15 கல்வியாளர்கள் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த, இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
மிகக் குறைந்த விலை, "ஆகாஷ்"   டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான, "டேட்டாவிண்ட்" நிறுவனர், சுனித் சிங் துலி, 44, மற்றும், "எட் எக்ஸ்"  என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவரான, ஆனந்த் அகர்வால், 53, ஆகிய இருவரும் இப்பட்டியலில், இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின், ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத் தயாரிப்பான, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, "ஐபேடு" க்கு மாற்றாக, 4,000 ரூபாயில், "ஆகாஷ்" டேப்ளட் பி.சி., தயாரிக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் அனைவருக்கும், அந்த விலையில், ஆகாஷ் டேப்ளட் பிசியை தயாரித்து வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அது பற்றி துலியிடம், அப்போது கேட்டபோது, "பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனத்தின், "ஐபேடு" பற்றி நான் கவலைப்படவில்லை; உலகம் முழுவதும், 300 கோடி பேருக்கு அருமையான கருவியை தயாரித்து வழங்க முடியும் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.
போர்ப்ஸ் கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், வங்கதேசத்தில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும், சல்மான் கானும் ஒருவர். "கான் அகடமி" என்ற, ஆன்லைன் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சல்மான் கானுக்கு, 36 வயது தான் ஆகிறது. அவரின், ஆன்லைன் வீடியோ பாடங்களை, 20 கோடி பேர் படித்து பயன் பெறுகின்றனர். அவரின், "யூ டியூப்" பக்கத்தில், நான்கு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...