கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்

நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது. தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா பற்றி கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய(CABE) கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. முன்னாள் மத்திய மனித வளத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரியின் தலைமையில் இயங்கிய CABE -ன் துணைக் கமிட்டி, இந்த மசோதாவை வடிவமைத்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டால், நன்கொடை வசூலிக்கும், தகுந்த காரணமின்றி ஒரு மாணவரை சேர்க்க மறுக்கும், சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்களை ஒரு குறிப்பிட்ட கடையில்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்ற, போலியான விளம்பரம் தருகின்றன, குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனோரீதியில் கடும் துன்பம் தருகின்ற போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வழியேற்படும். அந்த அபராதம் ரூ.10 லட்சம் வரை இருக்கும். இந்த மசோதாவில், மாநில அரசுகள், இதுதொடர்பான குற்றங்களை விசாரிக்க, ஒரு குறைதீர்ப்பு மையத்தை அமைக்கும்படி, மாநில அரசுகளை கேட்டுக்கொள்ளும் அம்சம் இடம்பெற்றுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...