கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வி அறிவே வன்முறையை தீர்க்க மிகச்சிறந்த மருந்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

"கல்வி அறிவே வன்முறைக்கு மிகச்சிறந்த மாற்று மருந்து,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூரில், மாணவர் விடுதி அடிக்கல் நாட்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: அமைதி, சகிப்புத் தன்மை மற்றும் மனிதாபிமானம் அதிகரிக்க, கல்வியே காரணமாக உள்ளது. இந்த சமுதாயத்தில் காணப்படும், வன்முறை, சகிப்புத் தன்மையின்மை, மக்களிடையே காணப்படும் பிரிவினை போன்றவற்றை தீர்க்க, மிகச்சிறந்த மாற்று மருந்து கல்வியே. கல்வி கற்பதன் மூலம், இந்தப் பிரச்னைகளை தீர்க்கலாம். எனவே, இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களையும், இந்த நாட்டையும் முன்னேற்ற வேண்டும். நம் நாட்டில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், கிராமங்களில் வசிக்கின்றனர். என்ன தான், மருத்துவமனைகள், கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், அங்கு சென்று பணியாற்ற மருத்துவர்கள் தயாராக இல்லை. இந்த சமுதாய நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத வரை, இப்பிரச்னைக்கு விமோசனமே இல்லை. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை, இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு அதை, இந்நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். நாம் முக்கியமானவராக இருப்பது நல்லதே, அதே நேரத்தில், நல்லவராக இருப்பது அதை விட நல்லது. இவ்வாறு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...