கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


அன்பான பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம் ,


       இக்கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.


    உங்களில் மூத்த ஆசிரியராகவும், மூத்த அலுவலராகவும், பணியாற்றிய நான் உங்களோடு எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


உயர்த்துவோம் உயர்வோம்

இது நமது தாரக மந்திரம் 


ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி

இது நமது முன்னோர்கள் வாக்கு 


நாம் உறுதி ஏற்று பள்ளிக்குச் செல்வோம் .


1. பள்ளியைப் பேணிப் பாதுகாப்போம் ,

2. பள்ளியை அழகாகவும் வைப்போம் ,

3 . பள்ளி வகுப்பறையைத் தூய்மையாக்குவோம்

4 . பள்ளி சுகாதாரத்தை உறுதி செய்வோம் 

5. மாணவர்களை நேசிப்போம் 

6. காலை இறை வணக்கக் கூட்டத்தை சிறப்பிப்போம் 

7. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை ஆர்வப்படுத்துவோம் ,

8. பள்ளி விழாக்களை பெருமைப் படுத்துவோம் 

9. விளையாட்டின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவோம் ,

10. அனைத்துப் பள்ளி வயதுப் பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்போம் ,

11. பெற்றோருடன் இணைந்து செயல்படுவோம் ,

12. SMCயுடன் இணைந்து பணியாற்றுவோம், 

13. அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்வோம்,

14. அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்போம்

15. நமது அரசுப்பள்ளி பெருமைகளைப் பேசுவோம் ,

16. குழந்தைகளின்  இல்லம் நோக்கி,

குழந்தைகளின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம் பெறுவோம்.

      "உங்கள் வாழ்வும் வளமும் நலமும் சிறக்க வாழ்த்துகின்றேன்" .

அன்புடன் 

ச.கண்ணப்பன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10-point demands including implementation of old pension scheme: Teachers' strike announcement - Talks with Minister today

   பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் : ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு - அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை 10-po...