கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே' - அரசு ஊழியர்கள் புலம்பல்

தீபாவளி அட்வான்ஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தும், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததாக' உள்ளது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.தீபாவளி அட்வான்ஸ் ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி தர ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அரசும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான உத்தரவு(எண்- 388, நாள்: 6.11.2012) 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் நவ., 6ம் தேதிக்கு பின்பு அட்வான்ஸ் பெறுவோருக்கே ரூ. 5 ஆயிரம் வழங்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு முன் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். தீபாவளிக்காக 75 சதவீத ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள பழைய அட்வான்ஸ் ரூ. 2 ஆயிரத்தை பெற்றனர். முதல்வரின் அறிவிப்புக்கு மாறாக, நவ.,6ல் அரசாணை வெளியாகி, அதற்குபின்னர் கேட்பவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் என்று கூறியதால், பலர் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளனர். அட்வான்ஸ் வாங்கிய தொகையை இன்னும் பிடித்தம் செய்ய துவங்காததால், தங்களுக்கும் இந்த அரசாணை பயன்படும் வகையில், உத்தரவு பிறப்பித்தால் நல்லது என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...