கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.
இப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பின் விபரம்
எதிர்கால கணிதவியல் அறிஞர்களை உருவாக்குவதே MTTS படிப்பின் பிரதான நோக்கம். ஒவ்வொரு வருடமும், கோடைகாலமான, மே மற்றும் ஜுன் மாதங்களில், 4 வாரங்கள் நடத்தப்படும் இப்பயிற்சி படிப்பில், மாணவர்கள், கணித சிக்கல்கள் குறித்து அதிக கேள்விகள் கேட்டு, தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இந்த MTTS படிப்பானது, இந்தியா முழுவதும் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. பல்வேறு மையங்களில் நடத்தப்படும் இப்படிப்பில், ஒரு நிலைக்கு(level) சுமார் 35 முதல் 40 மாணவர்கள் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும், சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. இலவச தங்குமிடம் கொடுக்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான sleeper class ரயில் டிக்கெட்டும் தரப்படுகிறது.
நடத்தப்படும் முறை
வகுப்புகள், ஒவ்வொரு நாளும், காலை 9.30 முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். Problem sessions மற்றும் மாணவர் செமினார்கள், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இத்தகைய தீவிர பயிற்சியின் மூலம், ஒரு மாணவருக்கு, அழுத்தமான சூழலில் பணியாற்றும் பயிற்சி கிடைக்கிறது.
இப்படிப்பில், கணித சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்படும் USP என்ற சிக்கல் வாய்ந்த பயிற்சி முறையானது, மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இச்செயல்முறையானது, கணிதத்தை கற்கும் வழக்கமான முறைகளிலிருந்து, MTTS முறைக்கு மாணவர்களை இட்டுச் செல்கிறது. குறிப்புகளின் நகல்களும், படிப்பதற்கான சில இலவச உபகரணங்களும் கிடைக்கின்றன.
தேர்வாதல்
இப்படிப்புக்கு, மாணவர்களைத் தேர்வுசெய்ய, 5 நடைமுறைகளைக் கொண்ட, தனித்துவமான வழிமுறைகளை, தேர்வு கமிட்டி பின்பற்றுகிறது. ஒரு ஆண்டின் டிசம்பர் மாதம் 2ம் பாதியில் துவங்கும் இந்த தேர்வுசெய்யும் நடைமுறை, அடுத்தாண்டு, பிப்ரவரி 3ம் சனிக்கிழமையன்று முடிகிறது.
1 மற்றும் 2ம் சுற்றுகள் - விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில், தகுதியற்றவர்களை நீக்குவதற்கான சுற்றுகள் இவை.
3 மற்றும் 4ம் சுற்றுகள் - ஒரே மாநிலத்தை சேர்ந்த மற்றும் தொடர்புடைய கிரேடிங் முறையைக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த, shortlist செய்யப்பட்ட மாணவர்களிலிருந்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இச்சுற்றுகளில் நடைபெறும்.
5ம் சுற்று - பிராந்திய அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்யும், தேசிய அளவிலான சுற்று இது.
விண்ணப்பித்தல் எவ்வாறு?
விண்ணப்ப படிவம் மற்றும் ஆசிரியரின் பரிந்துரைக் கடிதம் போன்றவை முக்கியமானவை. இந்தக் கடிதத்தின் மூலமாக, ஒரு மாணவரின் உற்சாகம், புரிந்துகொள்ளும் திறன், உறுதியான மற்றும் தீர்மானமான மனப்பாங்கு ஆகியவை மதிப்பிடப்படும்.
இதுதவிர, ஒரு மாணவரின், பிராந்திய மற்றும் கிராமப்புற பின்னணியும் கணக்கில் எடுக்கப்படும். ஒரே கல்வி நிறுவனத்திலிருந்து, அதிகபட்சம், 2 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்ற விதியும் உண்டு. மாணவிகளின் பங்கேற்பை உறுதிசெய்ய, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
பழைய மாணவர்கள், அடுத்த நிலைக்காக விண்ணப்பித்தால், முந்தைய நிலையில் அவர்களின் செயல்பாடு கருத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேர்வு நடைபெறும்.
MTTS -ஐ பொறுத்தவரை, வெறுமனே பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், இதன்மூலம், தகுதியான மாணவர்கள், வாய்ப்பு பெறுவது தடைபடும்.
தனிநபர் கவனம்
இப்பயிற்சி படிப்பில், பல்வேறு கல்வி நிறுவனங்களின் கணிதத்துறையில் ஆசிரியராக பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள், இங்கு ஆசிரியர்களாக பணியாற்றுவர். அவர்கள், வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து, மாணவர்கள், தங்களுடன் கலந்துரையாடி, சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள துணைபுரிகின்றனர்.
தேனீர் இடைவேளி மற்றும் உணவு இடைவேளை நேரங்களிலும் கூட, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்க, ஆசிரியர்கள் துணைபுரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட, தங்களின் தனிப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் தங்குமிடம் சென்று, அதுகுறித்து விவாதிக்க, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாணவர் கருத்தரங்கள்
இப்பயிற்சி படிப்பின் 2வது வார இறுதியில், தாங்கள் தேர்வு செய்த Topic தொடர்பாக, MTTS கற்பித்தல் முறையில், ஒவ்வொரு மாணவரும் ஒரு Presentation வழங்க வேண்டும். இம்முறையில், பார்வையாளர்களிடம், கேள்விகள் கேட்கப்படுகின்றன. (பார்வையாளர்கள் என்பவர்கள், இதர மாணவர்களும், ஆசிரியர்களும் அடங்கிய குழுவினர்தான்). பார்வையாளர்கள், பதிலை யோசித்து முடிவு செய்ய, இடைவேளையும் தரப்படுகிறது.
இந்த செமினார் மூலமாக, கூட்டத்தைக் கண்டு பேச பயப்படும் மாணவர்கள், தங்களின் அச்சமும், கூச்சமும் நீங்கி, தங்களின் கருத்தை தெளிவாக வழங்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள். மேலும், இதன்மூலமாக, மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலும் மேம்படுகிறது.
இத்தகைய Presentation வழங்க, ஒரு சிக்கலின் பல அம்சங்களை மாணவர்கள் ஆராய வேண்டியுள்ளதால், அது அவர்களின் கணித அறிவையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் வளர்ச்சியடைய செய்கிறது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில், நிறைய குறுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு
பொதுவாக, 3 நிலைகளிலான பயிற்சியும் ஒரே மையத்தில் வழங்கப்பட்டாலும், மாணவர்களை அதிகம் கொண்ட 0 நிலை பயிற்சியானது, 3 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும், தனித்தனி விடுதி வசதிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில், சில சமயம், இன்ப சுற்றுலாக்களும் உண்டு.
ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், உள்கட்டமைப்பு வசதிகள் வித்தியாசப்படும். உணவைப் பொறுத்தவரை, தென்னிந்திய மையங்களில், அதற்கேற்ற உணவு வழங்கப்படுகிறது. இதனால், வடஇந்திய மாணவர்கள் சிரமமாக உணரலாம். சில இடங்களில், உள்கட்டமைப்பு வசதிகளும் குறைபாடுடையதாக இருக்கலாம்.
ஆனால், எத்தனை குறைகள் இருந்தாலும், கணிதத்தை காதலிப்பவர்கள், இவற்றை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், தங்களின் பாடம் தொடர்பாக அறிந்துகொள்ள, அனுபவம் பெற, விவாதிக்க, MTTS ஏராளமாக வாய்ப்புகளை வழங்குகிறது என்பது மட்டும் நிஜம்.
நிலைகள் பற்றிய விபரங்கள்
நிலை 0 - இளநிலை கணிதப் படிப்பில், முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள்.
நிலை I - 2 மற்றும் 3ம் ஆண்டு கணித இளநிலை மாணவர்கள் இருப்பார்கள்.
நிலை II - முதலாமாண்டு முதுநிலை மாணவர்கள்.
நிலை 0ன் பாடத்திட்டம்
Basic real analysis, Linear Algebra, Geometry(curve tracing, sketching of surfaces and classification of quadric surfaces) and Discrete probability, Combinatorics and Elementray number theory போன்றவை இருக்கும்.
நிலை 2 மற்றும் 3 பாடத்திட்டம்
MTTS முறையிலான, Algebra, Analysis, Geometry and Topology போன்றவை இருக்கும்.
தேர்வு கிடையாது
இப்பயிற்சி படிப்பை முடித்தப்பிறகு, தேர்வுகள் நடத்தப்படாது. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், தனித்தனியாக Grade வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால், அது மற்றவர்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...