கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பொறியியல் கல்லூரிகள் கண்காணிப்பு குழுவில் மாற்றம்

தனியார் பொறியியல் கல்லூரிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கான குழுவை மாற்றி அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய குழுவில், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

 தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், நீதிபதி பாலசுப்ரமணியம் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்கவும், கல்லூரிகளில் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, 2012-13ம் கல்வியாண்டிற்கு, புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து, உயர்கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். குழுவில், அண்ணா பல்கலை, இயற்பியல் துறை பேராசிரியர் செல்லதுரை, சுற்றுச்சூழல் கல்வி மைய பேராசிரியர் பழனிவேலு ஆகிய இருவர் இடம்பெற்றுள்ள்ளனர். மேலும், அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து, இணை பேராசிரியர் தகுதிக்கு குறையாத ஒருவரை, ஒவ்வொரு ஆய்வின்போதும், கண்காணிப்பு குழுவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...