பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த
வருவாய் உடையவர்கள் ஆகியோருக்கு, வீட்டுக் கடன் பெறுவதற்கான, ஆண்டு வருவாய்
உச்சவரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டில்லியில்,
"ஹட்கோ' சார்பில் நடைபெற்ற "பில்ட்டெக்' 2012 என்ற நிகழ்ச்சியில்
பங்கேற்ற, மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் அஜய்
மக்கான், கூறியதாவது: ""பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்களுக்கு,
தற்போது, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடன் பெற, ஆண்டு வருவாய், 60
ஆயிரம் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு உள்ளது. இனி, இந்த உச்சவரம்பு, ஒரு
லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அதுபோல், குறைந்த வருவாய்
பெறுபவர்களுக்கு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், ஒரு
லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்கள், "ராஜிவ் அவாஸ் யோஜனா' என்ற
இத்திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெறலாம். இதன் மூலம், போலியான வருவாய்
சான்றிதழ்கள் சமர்ப்பித்து, வங்கிகளில் கடன் பெறுவது தவிர்க்கப்படும்.
இத்திட்டம் மூலம், 20 லட்சம் பேர், பயன்பெறுவார்கள். 12வது ஐந்தாண்டு
திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இப்புதிய உச்சவரம்புகள்
குறித்து, வங்கிகள் மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
No Work No Pay - One Day All India Strike
இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.