கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடி குறித்து விசாரணை : அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலையில், நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய, பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்த வேண்டும், என அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார். அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, 50 சதவீதம் ஊதியம் என்றும், 50 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவும் முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேவையற்ற பணி நியமனங்களை செய்துவிட்டு, நிதி நெருக்கடி என காரணம் காட்டி, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் முடிவெடுத்திருப்பது, பல்கலையின் மாண்பிற்கு ஏற்றதல்ல. நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்தவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணி நியமனம் குறித்த விதிகளை, அண்ணாமலை பல்கலையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு, குழு அமைத்து சிறந்த கல்வியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு, பாதி சம்பள அறிவிப்பை, திரும்ப பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...