கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >...